கரூரில், "கழகப் பொதுச் செயலாளராக பதவி ஏற்க இருக்கும் எங்கள் சாமி, எடப்பாடி பழனிசாமி" என்ற வாசகத்துடன் ஓபிஎஸ்சை ஓரம் கட்டும் வகையில், கரூர் மாவட்ட அதிமுகவினரால் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஓபிஎஸ், இபிஎஸ் இடையே நீர்ப்பூர்த்த நெருப்பாய் இருந்து வந்த பதவி மற்றும் அதிகாரப் போட்டியானது ஒற்றைத் தலைமை என்ற பெயரில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஓ.பி.எஸ்சை ஓரம்கட்ட முடிவு செய்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அவருக்கு இருக்கும் ஆதரவாளர்களின் பலத்தையும், செல்வாக்கையும் நிரூபித்து காட்டி ஓபிஎஸ்சை ஓரம் கட்டினார். அதன் பின்னர், கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த பேனரில் ஓபிஎஸ் படத்தை அகற்றி எடப்பாடி ஆதரவாளர்கள் தங்களது எதிர்ப்பை காட்டினர். பின்னர், படம் வைக்கப்பட்டது அது வேற கதை.
அதிமுகவில் தனக்கென இருந்த செல்வாக்கை ஓபிஎஸ் இழந்து தடுமாறி வரும் சூழ்நிலையில், வரும் 11 ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு நடக்கும் என எடப்பாடி ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர். அதில், அதிமுக இனி ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்படும் என தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாக கூறப்படுகிறது. இதன் முன்னோட்டமாக எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமையில் அதிமுக என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கரூர் மாவட்டத்தில் "கழகப் பொதுச் செயலாளராக பதவி ஏற்க இருக்கும் எங்கள் சாமி - எடப்பாடி பழனிசாமி " என்ற வாசகத்துடன் ஓபிஎஸ்-க்கு எதிராக பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் செல்வாக்கை நிருபிக்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் அவருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
கரூர் மாவட்ட அதிமுகவை பொருத்தவரை மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட பெரும்பான்மை நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கரூர் மாவட்ட அதிமுக தலைமை அலுவலக சுற்றுச்சுவரில் கரூர், க.பரமத்தி ஒன்றிய நிர்வாகிகள் சார்பில் இபிஎஸ் க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கழக பொதுச் செயலாளராக பதவி ஏற்க இருக்கும் எங்கள் சாமி - எடப்பாடி பழனிச்சாமி என்ற வாசகத்துடன் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.
மாவட்ட அதிமுக அலுவலகம் மட்டுமின்றி கரூர் மாநகரின் முக்கிய சாலைகளிலும், தேதிகள் மாறலாம் - தலைமை மாறாது, தலைமையை தேர்ந்தெடுப்பது தொண்டர்களும், மக்கள் மன்றமும் மட்டுமே என்ற வாசகங்களுடன் ஆங்காங்கே ஓபிஎஸ் தரப்புக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டப்பட்டுள்ள வால் போஸ்டருக்கு, கரூரில் தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இதற்கு பதிலடி கொடுப்பார்கள் அல்லது ஒட்டு மொத்தமாக கரூர் மாவட்ட அதிமுக இபிஎஸ் கையில் உள்ளதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்