தி.மு.க. தலைவரும், தி.மு.க. கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் இன்று கொளத்தூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கொளத்தூரில் உள்ள ஜி.கே.எம். காலணியில் உள்ள பெண்கள் அமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகளைச் அவர் நேரில் சந்தித்து, மு.க.ஸ்டாலினை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். மேலும், தி.மு.க.விற்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களையும் விநியோகம் செய்தார்.