இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உள்ளிட்ட நடைமுறைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் 9ம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு கொரோனா தாக்கம் மீண்டும் வலுப்பெற்று வரும் நிலையில், அதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.




டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது அவரது உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதாகவும், தொடர்ந்து அவர் கண்காணிப்பட்டு வருவதாகவும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரபலங்களுக்கு தொற்று பரவி வரும் நிலையில் மீண்டும் கொரோனா விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன.