அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் சோதனை செய்யப்பட்ட நிலையில், தான் ஆடம்பரத்தை விரும்பாதவன் என்று  அவர் கூறியுள்ளார்.


கடந்த வாரம் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நிலையில்,  சோதனையில் சிக்கிய ஆவணங்கள் குறித்து கே.சி.வீரமணி கூறுகையில், “என்னிடம் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் 40 ஆண்டுகள் பழமையானது. அதன்விலை 5 லட்சம் ரூபாய்தான். நான் ஏழாவது படிக்கும்போதே என் தந்தை  எனக்கு பென்ஸ் காரை வாங்கிக் கொடுத்துள்ளார். நான் ஆடம்பரத்தை விரும்பாதவன். கட்டி கட்டியாக தங்கம், வைரம் எனக்கு எதற்கு?. வீடு கட்டுவதற்காக வாங்கி வைத்திருந்த மணல் அது. அதற்கு ரசீது இருக்கிறது” என்று கூறினார்.


அதிமுக முன்னாள் அமைச்சரான திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்ந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவுசெய்த நிலையில் கடந்த 16ஆம் தேதி காலை 5.30 மணி முதல் ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி.வீரமணியின் வீடு, சகோதரர்கள் வீடு, உறவினர்கள் வீடுகளிலும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூர், சென்னை உள்ளிட்ட 35 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.




18 மணி நேரச் சோதனைக்கு பிறகு, இரவு 11.15 அளவில் அவரது வீடு அமைந்துள்ள இடையம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை நிறைவடைந்தது. இதில் மொத்தம் 34 லட்சம் ரொக்க பணம் ,இந்திய மதிப்பில்  1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் , ரோல்ஸ் ராயல்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார்கள், 623 சவரன் தங்க நகைகள், 7 .2  கிலோ வெள்ளி பொருட்கள் , 47 கிராம் வைர நகைகள், 5 கம்யூட்டர், ஹார்ட்டிஸ்க் , வங்கிக் கணக்கு புத்தகங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச்சென்றனர்.


மேலும் 30 லட்சம் மதிப்பிலான 275 யூனிட்  மணலும் பறிமுதல் செய்துள்ளதாக லஞ்ச உழைப்பு துறை அதிகாரிகள் அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் தெரிவித்துள்ளனர்.


அரசியல் காழ்ப்புணர்ச்சியோடும் , பழிவாங்கும் எண்ணத்தோடும் , உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக  நிற்பதற்கு இடையூறு ஏற்படுத்துவதற்காகவும்  நடத்தப்பட்ட சோதனை இது. அவர்களுக்கு தேவையானது எதுவும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதற்கான பதிலை உள்ளாட்சித் தேர்தலில் நிரூபித்துக் காட்டுவோம் எனச் சோதனையின் முடிவில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் முன்னாள் அமைச்சர்  கே.சி.வீரமணி.


உள்ளாட்சியில் அரசியல் கட்சிகளின் பலம் என்ன? இதோ முழு விபரம்...


உள்ளாட்சி உள்ளது உள்ளபடி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால் பதிக்கப் போவது யார்? A to Z களநிலவரம்!