பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், நீண்ட தேர்தல் பிரசாரத்தில் உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதுகாத்தீர்கள் என்ற கேள்விக்கு சுவாரஸ்யமான பதிலளித்தார். ‛காலை 7:30 மணிக்கு எழுந்ததும் காபி குடித்ததாகவும், பின்னர் நிர்வாகிகளுடன் தொகுதி நிலவரம் குறித்து ஆலோசித்து விட்டு பிரசார வாகனத்தில் ஏறி அமர்ந்தால் அன்றைய தினம் ஓடிவிடும்,’ என கூறிய உதயநிதி,
‛பல நேரங்களில் மதிய உணவு உட்கொள்ளவில்லை என்றும், வாகனத்தில் பர்க்கர், பீட்சா போன்றவைதான் தரப்பட்டதாகவும், அவற்றைத்தான் உண்டு பிரசாரம் செய்ததாக தெரிவித்தார். பரப்புரை முடிந்து அறைக்கு வந்ததும், ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசுவேன் என்றும், மனைவி மற்றும் குழந்தைகளிடம் வாட்ஸ் அப் அல்லது ஃபேஸ்டைம் மூலம் பேசுவேன்,’ எனக்கூறியுள்ளார்.