ஓட்டுப்பதிவு நாளன்று நடிகர் விஜய் சைக்கிளில் வந்ததும், நடிகர் அஜித் கருப்பு, சிவப்பு மாஸ்க் அணிந்து வந்ததும் திமுக கூட்டணிக்கு சார்பான சமிக்கை என பரவலாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறிக்கும் விதமாகவே விஜய் சைக்கிளில் வந்ததாக கூறப்பட்ட கருத்தை சில மணி நேரத்தில் உதவியாளர் மூலம் மறுத்த விஜய், போக்குவரத்து நெரிசலுக்காக சைக்கிளில் வந்ததாக அறிவித்தார்.



அஜித், விஜய் மனதில் இருந்தது:  வாக்குப்பதிவில் நடந்ததை விவரிக்கும் உதயநிதி


அஜித் தரப்பில் வழக்கம் போல விமர்சனங்களுக்கு பதிலளிக்கவில்லை. ABP நாடு டிஜிட்டல் தளத்திற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பிரத்யேக பேட்டியில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்தார். அதில் விஜய், அஜித் குறித்த கேள்விக்கு, அவர்கள் மனதில் இருப்பதற்கு என்னால் கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறிய உதயநிதி, அவர்கள் மனதில் ஏதாவது இருக்கலாம் என்றும் தெரிவித்தார். விஜய் சார் அதற்கு வேறு காரணம் தெரிவித்திருந்தாலும் , அஜித் சார் எந்த கருத்தும் தெரியவில்லை என்று கூறிய உதயநிதி, இருப்பினும் அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை நான் தெரிவிக்க கூடாது,’ என்றார்.