மணிப்பூரில் நடந்த சம்பவத்தை கண்டித்து கரூரில் மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


 


 


 




 


கரூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலாவதி சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தை கழக கொள்கை பரப்புத் துணை செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி துவக்கி வைத்தார். கரூர் மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், எம்எல்ஏக்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, இரா. மாணிக்கம், மாநில நெசவாளர் அணி  செயலாளர் நன்னியூர் ரஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில்  2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.


 


 


 


 




 


மணிப்பூரில், மனிதநேயம் இல்லாமல் பெண்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை சம்பவத்தைக் கண்டித்தும்,  உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வரும் பா.ஜ. அரசைக்  கண்டித்தும் திமுக மகளிர் அணியினர்  2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியதை வேடிக்கை பார்த்த  மணிப்பூர் மற்றும் ஒன்றிய பாஜக அரசு என கோஷமிட்டனர்.
  


 


 




 


இதுவரை 27 குக்கி பழங்குடியின பெண்களை மிகவும் கொடூரமாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு,
இதில், 7 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டும், 5 பேர் துப்பாக்கியால்  சுடப்பட்டும், 2 பேர் எரித்தும் கொல்லப்பட்டுள்ளனர்.  மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சி நடத்தும் பாஜக இதை வேடிக்கை பார்த்து வருகிறது என  கோஷங்கள் எழுப்பினர்.


மணிப்பூர் வன்முறையை கண்டித்து கரூரில் சிறுபான்மையினர் அமைப்பினர்  சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் பங்கேற்றனர்.


மணிப்பூர் மாநிலத்தில் சட்ட இறையாண்மையும் மக்கள் இறையாண்மையும் காக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கண்டனம் முழக்கம் எழுப்பினர்


 மணிப்பூரில் அண்மையில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.  இந்த செயல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் கரூரில் இந்த சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூரில் உள்ள சிறுபான்மை அமைப்பு சார்பில், சிஎஸ்ஐ மறைமாவட்ட தலைவர்  பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில்   500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


மணிப்பூரில் நடைபெற்று வரும் கொடுமைகளை  கண்டித்தும் பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும்,  மௌனம் காக்கும் மணிப்பூர் அரசையும் மத்திய அரசையும் கண்டித்து அவர்கள் முழக்கம் எழுப்பினர். உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்து மணிப்பூரில் அமைதி காக்க வேண்டும், மனித உரிமையை காக்க வேண்டும்,  பெண்களை  காக்க வேண்டும் என  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் முழக்கம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஎஸ்ஐ கத்தோலிக்க, பெந்தகோஸ்த் திருச்சபை அமைப்பை சேர்ந்தவர்கள், பெண்கள், பாதிரியார்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அமைப்பை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.