மத்தியில் ஆட்சியில் இருக்கிற மமதையில் நயினார் நாகேந்திரன் பேசுவதாக திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன் பேட்டியளித்துள்ளார். 


இது குறித்து பேசிய இளங்கோவன், என்ன காரணத்தை அடிப்படையில் தமிழகத்தை 2-ஆக பிரிக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் குறிப்பிடுகிறார். மத்தியில் ஆட்சியில் இருக்கிற அதிகார மமதையில் அவர் பேசுகிறார். வருவாய் எவ்வளவு என்றே தெரியாமல் உரிமை தொகையை பெறுவதில் கூட பல முறை கெஞ்சி கேட்கவேண்டிய நிலையை ஏற்படுத்தி விட்டனர். மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பிடுங்கி கொள்கிறது. இந்த கோபத்தின் அடையாளமாகவே அ.ராசா நாமக்கல் கூட்டத்தில் இவ்வாறு பேசி உள்ளார். ஒருவேளை தமிழகத்தை பிரித்தால் 3-ஆக பிரித்தால் திமுகவுக்கு 3 முதலமைச்சர்கள் கிடைப்பார்கள். மாநில சுயாட்சி என்பதே திமுகவின் நிலைப்பாடு” என்று பேசியுள்ளார். 




தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருநெல்வேலி பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க முடியாது என்று நினைக்க வேண்டாம். பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம்” என்றார். தமிழ்நாடு தனி நாடு என்று ஆ. ராசா பேச்சை குறிப்பிட்டு தமிழ்நாடு சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் இவ்வாறு பேசியது குறிப்பிடத்தக்கது.