தமிழக ஆளுநர் ரவி அளித்த தேநீர் விருந்தை தமிழக அரசு நேற்று புறக்கணித்தது. நீட் மசோதா விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒத்துழைக்காததால் தமிழக அரசு இந்த தேநீர் விருந்தை புறக்கணித்தது.


தமிழக அரசின் புறக்கணிப்பிற்கு பா.ஜ.க. ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், வி.சி.க. எம்.எல்.ஏ. ஷாநவாஸ்  தேநீர் விருந்து புறக்கணிப்பிற்கு தமிழக அரசுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டிருந்தார். அந்த கருத்தை டேக் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தேநீர் விருந்து தனிப்பட்ட நிதியிலிருந்து வழங்கப்படவில்லை. தமிழ் மக்களின் பணம் செலவிடப்படுகிறது. கோப்பு வரும் வரை காத்திருப்போம் என்று பதிவிட்டிருந்தார்.






இந்த நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் என்னவோய் சங்கி எங்க அண்ணன் பில் கேக்குறாரு அப்போ அந்த டீ கூட ரவி சொந்த செலவு இல்லையா🤣🤣🤣 . இருக்குறது சென்னையில
தின்றது #தமிழ் மக்கள் காசுல. நாங்க குடுத்த ஒரு வேலை #நீட் மசோதா டெல்லிக்கு அனுப்புறது அதயும் செய்யல
அப்பறம் என்ன்ன்ன்னா மைசூர் பாக்கு தின்ன டீ காசு மிச்சம்னு கதவிடுற என்று பதிவிட்டுள்ளார். 






என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவிற்கு கீழே பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண