கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அவர் வேலை வாங்கித்தருவதாக ரூபாய் 3 கோடி மோசடி செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.




இந்த நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாகவும், அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் தி.மு.க. உறுப்பினர் ஒருவர் தி.மு.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர், சிவகாசி வட்டத்தைச் சேர்ந்த அனுப்பன்குளம் கிராமம் அருகே உள்ள ராமசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவர், தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,


“ நான் தி.மு.க.வில் கடந்த 15 ஆண்டுகளாக இருக்கிறேன். எங்களது மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் செய்தும், அவரை ஜெயலிலில் வைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சிறையில் அடைத்து இருப்பது எங்கள் பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவரது காலத்தில் பல நல்ல காரியங்களைச் செய்துள்ளார்.




பட்டாசு தொழிலாளர்களுக்கு, பட்டாசு தொழிலுக்கும் உறுதுணையாக இருந்தார். அவர் எங்கள் மண்ணின் மைந்தர். எனவே, இந்த சம்பவம் எனது மனதை வேதனைப்படுத்திவிட்டது. எனவே, கட்சி நிர்வாகமும், ஆட்சி நிர்வாகமும் திருப்தி இல்லையென்பதால் நான் எனது உறுப்பினர் கார்டை சரண்டர் செய்கிறேன். நான் நமது கட்சியில் இருந்து விலகிகொள்கிறேன்.”


இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.




மேலும், தனது தி.மு.க. உறுப்பினர் அட்டையும் தனது கடிதத்துடன் இணைத்து கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு அனுப்பியுள்ளார். அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக பொறுப்பு வகித்து மோசடி செய்த குற்றச்சாட்டிற்காக சிறைக்கு சென்றவருக்கு ஆதரவாக, தி.மு.க.வின் 15 ஆண்டுகால நிர்வாகி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க : IAS Officer Transfer: ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - எல்காட் செயல் இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி அருண்ராஜ் நியமனம்..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண