சிவகங்கை கூட்டத்தை பார்த்து பொறுக்க முடியாமல் பயந்து நடுங்கி போய் பதற்றத்தில் திமுக அரசு பொய் வழக்கு போட்டிருக்கிறது என திருவாரூரில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டியளித்தார்.

 

மதுரை விமான நிலையத்தில், அமமுக நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் மாவட்ட கழக செயலாளருமான நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் ஈடுபட்டனர்.

 

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ”அவரை ஒருவர் தவறாக இழிந்து பேசி கோஷமிடுகிறார். பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்துக் கொண்டு தவறான செயலில் ஈடுபடுக்க கூடாது என்று கூறினார்கள்.அண்ணன் இது குறித்து பேசவே இல்லை.அவர் ஒரு வார்த்தை பேசினார் என்று ஒரு சாட்சியை காவல்துறையோ அல்லது தமிழக அரசோ கொடுக்க முடியுமா.

 

ஒரு எஃப் ஐ ஆர் போட வேண்டுமென்றால் விசாரித்து போட வேண்டும் இல்லை எஃப் ஐ ஆர் போட்டு விட்டு விசாரிக்க வேண்டும் விசாரித்ததில் உண்மை இல்லை என்றால் எஃப் ஐ ஆர் ஐ திரும்ப பெற வேண்டும். ஒரு வார்த்தை கூட அவர் பேச மாட்டார். அப்படி சின்னத்தனமான விஷயங்களில் அவர் ஈடுபட மாட்டார். பேசாத ஒருவர் மீது அவரைப் பற்றி பேசியவர் புகார் கொடுக்கிறார் என்று அவர் மீது வழக்கு தொடுத்தது எந்த வகையில் நியாயம்.

 

இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. சிவகங்கை கூட்டத்தை பார்த்து அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மிகப்பெரிய கூட்டம் மாநாட்டை போன்ற கூட்டம் எழுச்சியான கூட்டம் அந்த கூட்டத்தை பார்த்து பயந்து போய் நடுங்கி போய் ஏதாவது பண்ண வேண்டும் என்று ஒரு பதற்றத்தில் இந்த வழக்கை தொடுத்திருக்கிறார்கள். இது நல்லது கிடையாது ஜனநாயகத்திற்கு உகந்த செயல் கிடையாது.

 

செய்யாத தவறுக்கு வழக்கு போட்டது என்பதை நாங்கள் கண்டிக்கிறோம் இந்த வழக்கு தொடர்ந்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். யார் யார் மீது வழக்கு கொடுத்தாலும் உடனடியாக காவல்துறை எஃப் ஐ ஆர் போட்டு விடுவார்களா அவருடன் பயணித்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பிற்கு இருக்கிறார்கள் ஏதாவது ஒரு வார்த்தை பேசியிருந்தாலோ அல்லது முகத்திலாவது கோபத்தை காட்டி இருந்தால் அவர்கள் எஃப் ஐ ஆர் போட்டுக் கொள்ளட்டும். முகத்தில் கூட அவர் கோபத்தை காட்டவில்லை. அப்படிப்பட்டவர் மீது பொய் வழக்கு போட்டுவிட்டு பின்னாடி விசாரிப்போம் என்று சொல்கிறார்கள் பின்னாடி விசாரியுங்கள் விசாரித்துவிட்டு எடப்பாடியாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இந்த நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

 

அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி இருப்பது குறித்த கேள்விக்கு நெல் முட்டைகள் தேங்கி இருப்பது மட்டுமல்ல நாடு முழுவதும் எல்லாமே தேக்கமாக இருக்கிறது.இது போன்ற பொய்யான வழக்கு போடுவது போன்றவை தான் இந்த ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று கூறினார்.