தேர்தல் பணியை தீவிரப்படுத்திய திமுக

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 முதல் 5 மாத காலமே உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மக்களை சந்திக்கும் வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் வீடு வீடாக பிரச்சாரம், புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்கும் பணியை தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியாக உள்ள திமுக மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் பொறுப்பார்களை நியமித்து தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.  மேலும் தொகுதியில் உள்ள பிரச்சனைகள், தொகுதியில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு, 

Continues below advertisement

திமுக நிர்வாகிகளோடு ஒன் டூ ஒன் மீட்டிங்

எதிர்கட்சியின் பலம், திமுக அரசில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு மக்களின் வரவேற்பு, மக்களின் மன நிலை மற்றும் உட்கட்சி பிரச்சனை தொடர்பாகவும் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கேட்டறிந்து வருகிறார். அந்த வகையில் 'உடன் பிறப்பே வா' என்ற பெயரில் `ஒன் டூ ஒன்' என்ற நிகழ்ச்சி மூலம் சட்டசபை தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். இன்று அதிமுகவின் பலம் வாய்ந்த கோட்டையாக கருதப்படும் கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களோடு தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கோவை மண்டலத்தின் பொறுப்பாளராக உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் கலந்து கொண்டார். 

கோவையை மொத்தமா கைப்பற்றனும்

அப்போது கோவை மண்டல நிர்வாகிகள் மத்தியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்  கோயமுத்தூர் மாவட்டத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற வேண்டும்  என செந்தில்பாலாஜிக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கோவை மண்டலத்தில் கடந்த முறை அதிக தொகுதிகளில் அதிமுக வென்ற நிலையில் தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் அதனை மாற்றி திமுக கோட்டையாக கோவையை மாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.   

Continues below advertisement