கரூர் மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் மேயர் கவிதா கணேசன், ஆணையர் ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, வார்டு பகுதிகளில் நடைபெற்ற தூய்மைப்பணி குறித்து மாமன்ற கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, தூய்மை பணி நடந்திருந்தால் அதற்கான புகைப்பட ஆதாரங்களை காட்ட வேண்டுமென அதிமுகவை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் கேட்டனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு கேட்க வேண்டும் எனவும், மாமன்ற கூட்டத்தில் இதுகுறித்து விளம்பர நோக்கத்தில் விவாதம் எழுப்புவதாக திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் சக்திவேல் அதிமுக தரப்பு கவுன்சிலர்களை கை ஓங்கி தாக்குதல் நடத்தும் முறையில் ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேயர் இரு தரப்பினரையும் பேசி சமாதானம் செய்தார். இருந்த போதும் தொடர்ந்து கவுன்சிலர்களுக்குள் ஏற்பட்ட அமளி காரணமாக மாமன்ற கூட்டத்தில் வாக்குவாதம் முற்றியது. இதற்கிடையில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக மேயர் கவிதா கணேசன் அறிவித்து கூட்டத்தை முடித்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்