தேர்தல் பரப்புரையின் மகாரஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் உரையானது, பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. 


மகாரஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல்:


மகாராஷ்டிரா மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தலானது, வரும் நவம்பர் மாதம் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கையானது நவம்பர் 23-ஆம் நடைபெறவுள்ளது. 


அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும், முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ள மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள தேர்தல் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜக கூட்டணியும் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்து மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றியை தொடரவும் காங்கிரஸ் கூட்டணி முயற்சி செய்து வருகிறது. ஒருபுறம் பாஜக கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளது. மறுபுறம் கான்ம்க்
 
அதற்கு எதிராக காங்கிரஸ் கூட்டணியில் உத்தவ் தாக்கரே சிவசேனாவும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளது. 


இந்நிலையில், தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், அங்கு கட்சிகளின் தேர்தல் பரப்புரையானது தீவிரமடைந்து வருகிறது.


சர்ச்சைக்குள்ளான ஏக்நாத் உரை:


இந்த தருணத்தில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் உள்ள சிவசேனா ( ஏக்நாத் சிவசேனா கட்சி) தலைவரான முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பேசும் வீடியோ காங்கிரஸ் கட்சியினர் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர். 
 
மகாராஷ்டிர மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள பரண்டா சட்டமன்றத் தொகுதியில் கட்சி வேட்பாளர் தானாஜி சாவந்துக்கு ஆதரவாக முதல்வர் ஷிண்டேவின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, உரையாற்றும் வீடியோவானது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


அந்த வைரலான வீடியோவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஒரு கூட்டத்தில் உரையாற்றுவதை காணலாம். அப்போது அவருக்கு அருகில் நின்ற சிவசேனா தலைவர் தானாஜி சாவந்த், இந்த வார்த்தைகளை உச்சரிப்பதைக் காணலாம். அவர் கூறுவதை சொல்ல சொல்ல முதலமைச்சர் கூறுவதை பார்க்க முடிகிறது. இந்த காட்சியானது, பெரிதும் வைரலாகி வருகிறது.






விமர்சிக்கும் காங்கிரஸ்:


இந்த வீடியோவை பகிர்ந்த காங்கிரஸ் தரப்பினர் விமர்சித்துள்ளதாவது "உலகின் முதல் மனித டெலிபிராம்ப்டரை" அறிமுகப்படுத்தியுள்ளார்.
 
"சிறந்த மனிதர் எப்பொழுதும் இரண்டு டெலிபிராம்ப்டர்களைப் பயன்படுத்தினாலும், சில சமயங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டும். இப்போது ஏக்நாத் ஷிண்டே, மனித பிராம்டரை உருவாக்கி, இந்தப் பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளார் " என்று கட்சியினர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இப்போது எந்த தொழில்நுட்ப பிரச்சனையும் மற்றும் சிரமமும் இருக்காது என காங்கிரஸ் தர்ப்பினர் விமர்சித்துள்ளனர்.