தெலுங்கானாவில் நடைபயணத்தின் போது தொண்டர் ஒருவரின் ஆட்டுக்குட்டியை ராகுல் காந்தி தனது தோளில் சுமந்தது போல் ஒரு புகைப்படம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ட்விட்டரில் பதிவிட்டார்.


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை சந்திக்கவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்கிறார். வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பிரிவினை அரசியல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக ‘இந்திய ஒற்றுமை பயணம்’ என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு உள்ளார்.


கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த நடைபயணம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியாணா, டெல்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீரை சென்றடைகிறது. குமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செப்டம்பர் 7ம் தேதி தொடங்கினார். இந்த பயணத்தை கன்னியாகுமரியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவுக்கு இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.


கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி தொடங்கிய இந்த பாதயாத்திரை கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தை கடந்து 23-ந்தேதி தெலுங்கானாவில் நுழைந்தது. அத்துடன் தீபாவளிக்காக 3 நாட்கள் ஓய்வு விடப்பட்டது. 3 நாள் ஓய்வுக்குப்பின் ராகுல் காந்தியின் பாதயாத்திரை தெலுங்கானாவில் இருந்து அக்டோபர் 27ஆம் மீண்டும் துவங்கியது. ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் தெலுங்கானாவில் 16 நாட்கள் நடக்கிறது. இதில் 19 சட்டசபை தொகுதிகள், 7 நாடாளுமன்ற தொகுதிகள் என மொத்தம் சுமார் 375 கி.மீ. தூரத்தை கடந்து, அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந்தேதி மகாராஷ்டிராவில் நுழைகிறார்.






தெலுங்கானாவில் நடைபயணத்தின் போது தொண்டர் ஒருவரின் ஆட்டுக்குட்டியை ராகுல் காந்தி தனது தோளில் சுமந்தது போல் ஒரு புகைப்படம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் G.O.A.T (greatest of all time) என்ற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ளது. தற்போது இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டும், இந்த ட்வீட்டை பகிர்ந்தும் வருகின்றனர்.


தெலுங்கானா பாதயாத்திரையின் போது பல சமய வழிபாட்டுத்தலங்களுக்கு ராகுல் காந்தி சென்று வழிபாடு செய்கிறார். அத்துடன் அரசியல், விளையாட்டு, வர்த்தகம், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களையும் அவர் சந்தித்து பேசுவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.கடந்த 50 நாட்களாக 4 மாநிலங்களில் 1,230 கி.மீட்டர் தூரத்தை நடைபயணக் குழுவினர் கடந்துள்ளனர்.


 


watch video : நோயாளியின் தலைமுடியை பிடித்து இழுத்து வந்த செவிலியர் ! வலுக்கும் கண்டனங்கள்!


Breaking LIVE : ஆன்லைன் ரம்மிக்கு அதிரடி தடை - ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!