Breaking LIVE : பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பிரதமர் மோடி புகழாரம்
Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.
அண்ணாமலை காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
குஜராத்தில் 35 ஆயிரம் அரசுப்பணிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற தசைகள் தொடர்புடைய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவு. மயோசிடிஸ் பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர் என சமந்தா தெரிவித்துள்ளார்
கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
அவசர சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 7ம் தேதி ஒப்புதல் அளித்தார்.
புதிய சட்டப்படி ஆன்லைன் சூதாட்டத்துக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ. 5 ஆயிரம் அபராதம். ஆன்லைன் விளையாட்டுகளை விளம்பரம் செய்தால், ஒரு ஆண்டு சிறை அல்லது ரூ.5 லட்சம் அபராதம்
வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்று சென்னை வானிலை மையம் தகவல்
முதுகுவலி ஏற்பட்டுள்ளதால் நீண்ட பயணங்களை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர் - தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மேற்கொள்ள இருந்த பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 18,750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
சமண துறவி ஆச்சார்யா ஸ்ரீதுளசியின் 109வது பிறந்தநாளையொட்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை
ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 9 ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பசும்பொன் தேவர் குருபூஜை நடைபெறுவதால் நவம்பர் 9 ம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.37,640 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.4,705 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம் நவ., 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. காலை 9.30 மணி - மாலை 5.30 மணி வரை அந்த அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார்.
மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பசும்பொன் கிராமத்தில் இன்று, நாளை டிரோன்களை பறக்க ராமநாதபுரம் ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் தடை விதித்துள்ளார்.
புதுச்சேரியில் நகரப்பகுதிகள், காலாப்பேட், பாகூர், அரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் இன்று கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Background
Petrol, Diesel Price : தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 161வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.
இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..?
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025 ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -