அரியலூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மதமாற்றமே காரணம் என்று பாஜக தொடர்ந்து கூறி வருகிறது. இந்த விவகாரத்தில் சிறுமியின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்றும் பாஜக தெரிவித்து வருகிறது. இந்நிலையில் , சிறுமி இறப்புக்கு நீதி கேட்டு பாஜக சார்பில் தமிழக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணா விரத போராட்டம் நடைபெற்றது.

 

இதில் பேசிய தமிழக பாஜகவின் மாநில துணை தலைவரும் பா.ஜ.க சட்ட மன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன், சட்டமன்றத்தில் ஆண்மை யோடு பேச ஒரு அ.தி.மு.க எம்.எல்.ஏ கூட இல்லை என்றும், எதிர்க்கட்சியாக இல்லா விட்டாலும் பாஜக வின் அண்ணாமலை மட்டுமே துணிச்சலோடு செயல் படுவதாகவும், அதிமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.

 


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- கச்சத்தீவை மீட்டுத்தரக்கோரி ராஜராஜ சோழன் சிலையிடம் சிவசேனா கட்சியினர் மனு



 


 


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு

 



இதற்கு அதிமுக தரப்பில் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக  அதிமுகவின் வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பெண்கள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெரவள்ளுர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். நயினார் நாகேந்திரன் குறைந்த பட்சம் தொலை பேசி மூலமாக எங்களது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் போராட்டங்கள் தொடரும் என கோஷங்கள் எழுப்பினர்.