ALL Party Meeting: இன்று அனைத்துக் கட்சி கூட்டம் - சி.எம். ஸ்டாலின் முக்கிய முடிவு? பங்கேற்பது, புறக்கணிப்பது யார்?

ALL Party Meeting CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

Continues below advertisement

ALL Party Meeting  CM Stalin: இன்றை அனைத்துக் கட்சி கூட்டத்தில், தொகுதி மறுவரயறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

Continues below advertisement

அனைத்துக் கட்சி கூட்டம்:

சென்னை தலைமைச்செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில்,  காலை 10 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த 45 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் அரசு விழா ஒன்றில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அனைத்து கட்சி கூட்டத்தை அரசியலாக பார்க்காமல் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்" என்று மீண்டும் அழைப்பு விடுத்து இருந்தார்.

பங்கேற்கும், பங்கேற்காத கட்சிகள்:

ஆளுங்கட்சியின் அழைப்பை ஏற்று திமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றன. பிரதான எதிர்க்கட்சியன அதிமுக கூட கூட்டத்தில் பங்கேற்கிறது. இதேபோல, அன்புமணி தலைமையிலான பாமக, , விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளும் மாநாட்டில் பங்கேற்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம், சீமான் தலைமயிலான நாம் தமிழர் கட்சி, பாஜக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகள் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

கூட்டத்திற்கான காரணம் என்ன?

நாட்டில் உயர்ந்துள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப அடுத்த நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மத்திய அரசின் மக்கள் தொகை கட்டுப்பாடு திட்டத்தை திறம்பட செயல்ப்டுத்தி, மக்கள்தொகை உயர்வை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. அதாவது மொத்தம் உள்ள 39 தொகுதிகள் 31 ஆக குறைய வாய்ப்பு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்தார்.

அதே நேரத்தில், மக்கள்தொகை உயர்வை கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கு தொகுதிகள் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதோடு, புதிய கல்விக் கொள்கை மூலம் மத்திய அரசு இந்தியை திணிப்பதாகவும், அதை செயல்படுத்தாதால் நிதியை வழங்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. இதேபோன்று பல்வேறு விவகாரங்களில் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிப்பதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்த நிலையில்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (புதன்கிழமை) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது.

கூட்டத்திற்கான நோக்கம் என்ன?

கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்து, கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தை முன்மொழிய உள்ளார்.

தொடர்ந்து, அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கப்படும். தீர்மானத்தின் மீது அனைவரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து முடித்தவுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும். நிறைவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச இருக்கிறார். அதனைத் தொடர்ந்து,கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படும். சுமார் 4 மணி நேரம் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது. இந்த கூட்டத்தின் மூலம், தொகுதி மறுவரையறை மற்றும் இருமொழிக்கொள்கையை தொடர்வது ஆகியவற்றில், தமிழக அரசியல் கட்சிகளின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த மாநில அரசு முயன்றுள்ளது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola