சட்டசபையில் பீடா போட்டு துப்பிய உ.பி எம்.எல்.ஏ: யார்னு தெரியும், தனியா வரச் சொன்ன சபாநாயகர்.!

UP MLA Spitting Pan: உத்தர பிரதேசம் சட்டப்பேரவை வளாகத்தில் எம்.எல்.ஏ ஒருவர் பீடா போட்டு துப்பியது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளதுடன் கண்டனத்திற்கும் வித்திட்டுள்ளது.

Continues below advertisement

உத்தரப் பிரதேசம் சட்டப்பேரவை வளாகத்தில் எம்.எல்.ஏ ஒருவர் பீடா போட்டு துப்பியதை, நான் வீடியோவில் பார்த்தேன், அவர் என்னை தனியாக வந்து சந்திக்குமாறு சட்டப்பேரவைத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Continues below advertisement

சட்டப்பேரவையில் பான் மசாலா:

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை வளாகத்தில், எம்.எல்.ஏ ஒருவர் பீடா ( பான் மசாலா ) போட்டு துப்பியிருக்கிறார். இதனால், அந்த பகுதியானது, சற்று சுகாதாரமற்று காட்சி அளித்திருக்கிறது.  இந்த காட்சியானது, சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள கேமராவில் பதிவாகி இருக்கிறது. இந்த தகவல் எப்படியோ சபாநாயகரிடம் சென்றுவிட்டது. 
 
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பேரவைத் தலைவர் மஹானா இன்று சட்டப்பேரவையில், எம்.பிக்களிடம் உரையாற்றினார்.  சட்டப்பேரவை உறுப்பினர் ( எம்.எல்.ஏ )  ஒருவர் , பேரவையின் வளாகத்தினுள் பீடா போட்டு துப்பியிருக்கிறார். சம்பந்தப்பட்ட நபரின் வீடியோவைப் பார்த்தேன். மேலும் அந்த நபரின் அடையாளத்தை வெளியிட விரும்பவில்லை. அந்த பகுதி சுத்தம் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. எம்.எல்.ஏ.க்கள் இதுபோன்ற செயல்களை தவிர்த்து, சட்டப்பேரவையின் கண்ணியத்தை காக்க வேண்டும்.


”தனியாக வந்து சந்திக்கவும்”

அந்த உறுப்பினர் யார் என்பது எனக்குத் தெரியும். வீடியோ கிடைத்திருக்கிறது. ஆனால் நான் யாரையும் இழிவுபடுத்தும் நோக்கத்தில், இல்லாததால் பொதுவெளியில், அந்த நபரின் பெயரை சொல்ல விரும்பவில்லை. அதைச் செய்த உறுப்பினர் என்னை வந்து தனியாக சந்திக்க வேண்டும், இல்லையெனில் நான் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் எச்சரித்தார்.
 
மற்றவர்களை கண்காணிக்குமாறு உறுப்பினர்களை வலியுறுத்தினார். மேலும், இதுபோன்று யாரேனும் இதைச் செய்வதைப் பார்த்தால், அவர்களைத் தடுக்க வேண்டும் என்றும், அனைத்து உறுப்பினர்களிடம் வலியுறுத்தினார். சட்டசபையை சுத்தமாக வைத்திருப்பது அனைவரின் பொறுப்பு. “சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ வந்து இதைச் செய்ததாகச் சொன்னால் நன்றாக இருக்கும்; இல்லையெனில், நான் அவர்களை உத்தரவிட்டு அழைக்க வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்தார்.

எம்.எம்.எல் ஏ-க்களுக்கு உத்தரவு:

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேரவைத் தலைவர் மகானா, “ இந்த சட்டப்பேரவையானது 403 உறுப்பினர்களுக்கான ஒரு இடம் மட்டுமல்ல, மாநிலத்தின் 25 கோடி மக்களுக்குமானது. சட்டப்பேரவையில் நேர்மறையான பிம்பத்தை வைத்திருப்பது முக்கியம், இதுபோன்ற செயல்பாடு எதிர்மறையாக இருக்கிறது. அனைத்து எம்.எல்.ஏக்களும் ஒருவரையொருவர் சரிபாருங்கள், பீடா யாராவது போடுகிறார்களா என்று. இதுபோன்று இனி நடக்க அனுமதிக்க வேண்டாம் என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன் என சட்டப்பேரவைத் தலைவர் மகானா தெரிவித்தார்.

Also Read: DMDK-ADMK: வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!

Continues below advertisement
Sponsored Links by Taboola