தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், பா.ஜ.க. எம்.பி. தேஜஸ்வி சூர்யா, தமிழகத்தில் பெரியாரிசத்தை ஒழிக்கவே பா.ஜ.க. இங்கு வந்திருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கண்டனத்தில்,
“தமிழ்நாட்டில் ‘பெரியாரிசம்’ (பெரியார் கொள்கையை) ஒழிக்கவே பா.ஜ.க. இங்கு வந்திருக்கிறது என்று பா.ஜ.க. தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன் ‘சனாதன தர்மம்’ என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர் தந்தை பெரியார்.

தமிழ்நாட்டில் ‘பெரியாரிசம்’ (பெரியார் கொள்கையை) ஒழிக்கவே பாஜக இங்கு வந்திருக்கிறது என்று பாஜக தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்

‘சனாதன தர்மம்’ என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர் தந்தை பெரியார்
— P. Chidambaram (@PChidambaram_IN) April 5, 2021

தமிழ் நாகரிகத்தையும் தமிழர் தன்மானத்தையும் மீட்டவர் தந்தை பெரியார் காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமுதாய விடுதலை மற்றும் சமூக நீதியைப் பெற்றுத் தந்தவர்கள் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜ் மற்றும் பேரறிஞர் அண்ணா.

தமிழ் நாகரிகத்தையும் தமிழர் தன்மானத்தையும் மீட்டவர் தந்தை பெரியார்

காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமுதாய விடுதலை மற்றும் சமூக நீதியைப் பெற்றுத் தந்தவர்கள் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜ் மற்றும் பேரறிஞர் அண்ணா
— P. Chidambaram (@PChidambaram_IN) April 5, 2021

தான் ஒரு திராவிடக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் அஇஅதிமுக பாஜக தலைவரின் பேச்சை ஏன் கண்டிக்கவில்லை? தந்தை பெரியாருக்குப் பதிலாக நரேந்திர மோடியைத் தங்கள் தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். கட்சி ஏற்றுக் கொண்டுவிட்டதா?” என்று பதிவிட்டுள்ளார்.

தான் ஒரு திராவிடக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் அஇஅதிமுக பாஜக தலைவரின் பேச்சை ஏன் கண்டிக்கவில்லை?

தந்தை பெரியாருக்குப் பதிலாக நரேந்திர மோடியைத் தங்கள் தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக EPS-OPS கட்சி ஏற்றுக் கொண்டுவிட்டதா?
— P. Chidambaram (@PChidambaram_IN) April 5, 2021

ஏற்கனவே தமிழகத்தில் எச்.ராஜா உள்பட சில பா.ஜ.க.வினர் பெரியாருக்கு எதிராக கருத்து தெரிவித்து, சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.