கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், அப்பகுதியில் தீவிரம் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவருக்கு ஆதரவான பரப்புரையின் போது கடவுள்களான ராமர், அம்மன் வேடமிட்டு சிலர் ஊர்வலமாக சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுயேச்சை வேட்பாளர் பழனிக்குமார் என்பவர் கமல் மீது கோவை காட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்ற காவல் துறையினர் கமல் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சுயேச்சை வேட்பாளர் புகாரில் கமல் மீது வழக்கு பதிவு
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன் | 04 Apr 2021 02:54 PM (IST)
ராமர் மற்றும் அம்மன் வேடமிட்டு பிரசாரம் செய்ததாக கமல் உள்ளிட்ட மூன்று பேர் மீது காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
kamal_cambign