சின்னப்பயலே சின்னப்பயலே... சேதி கேளடா.. நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா...எண்ணிப் பாரடா-நீ
எண்ணிப் பாரடா...ஆளும் வளரணும் அறிவும் வளரணும்-கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி.




தூத்துக்குடி மாவட்டம் ‭கோவில்பட்டி அருகே காமராஜர் நகர்,இபி காலனி, அன்பு கார்டன் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 9 லட்சம் மதிப்பிலான புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை மற்றும் கழிவு நீர் வாறுகளை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 




பின்னர் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளரிடம்  கூறுகையில் , நீட் தேர்விக்கு விலக்கு வேண்டும் என்று அதிமுக ஆட்சிpயல் இருந்த போது இறுதி போரடியது.நீதிமன்ற தீர்ப்பு காரணமாக நீட் தேர்வு நடைபெற்றது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தான் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டினை எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்தார். இதனால் அரசு பள்ளி மாணவர்கள், ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் மருத்துவக்கல்லூரி படிக்கும் நிலை உருவாகி உள்ளது.ஆனால் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வினை ரத்து செய்து விடுவதாக கூறிய திமுக 3 ஆண்டுகளாகியும் அதனை செய்யமால் ஏமாற்றி வருகிறது.


அண்ணா, எம்.ஜி.ஆர் இரண்டு தலைவர்களின் பெயர்களை உச்சரிக்கமால் யாரும் அரசியல் செய்ய முடியாது என்பதனை காட்டுகிறது.சினிமாதுறை மட்டுமல்ல எந்த துறையில் இருந்து வந்தாலும் அண்ணா, எம்.ஜீ.ஆர் இரண்டு தலைவர்களின் பெயர்களை உச்சரிக்கமால் அரசியல் இல்லை என்பதனை காட்டுகிறது.அரசியல் நாகரீகத்துடன், யதர்த்தமாக எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார்.அண்ணாமலை தரம் தாழ்ந்து பேசி வருகிறார்.இருவரின் பேட்டிகளை ஓப்பிட்டு பார்த்தாலே தெரியும் யாருடைய தகுதி என்ன என்பதை மக்களுக்கு நன்றாக தெரியும்
 
பாடலை பாடிய கடம்பூர் ராஜு, சின்னப்பயலே சின்னப்பயலே...சேதி கேளடா..நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா
எண்ணிப் பாரடா-நீ...எண்ணிப் பாரடா..ஆளும் வளரணும் அறிவும் வளரணும்.. என்று அண்ணாமலை போன்றவர்களுக்கு எடுத்துக்காட்டு விதமாக 60 ஆண்டுகளுக்கு முன்பு  எம்ஜிஆர் பாடி வைத்து சென்றுள்ளார். 


ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒன்று கூடி எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்ந்து எடுத்துதோம்.பாஜக மாதிரி வேறு எந்த கட்சி எம்.எல்.ஏக்களை நாங்கள் விலைக்கு வாங்கவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் துயரப்பட்டு இருந்த எங்களுடன் அவருடைய நிழலாக இருந்த சசிகலா எங்களுக்கு ஆதரவாக இருந்தார்.அதிமுகவின் 124 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் கையெழுத்துயிட்டு எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்ந்து எடுத்துதோம்


பாஜக மாதிரி வடமாநிலங்கள் குழப்பம் செய்தோ, அல்லது சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்த மாதரி நாங்கள் ஆட்சி அமைக்கவில்லை.கர்நாடக மாநிலத்தில் கூட சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி குழப்பத்தினை ஏற்படுத்த பாஜக முயன்று வருவதாக செய்து வருகிறது.


முருகனுக்கு தமிழ், ஆங்கிலம் தெரியுமா என்று விமர்சித்தவர்கள் திமுகவினர். ராமர் என்ன என்ஜீனியாரா என்று சேது சமூத்திர திட்டம் தொடர்பாக விமர்சனம் செய்தனர் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு, ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு எப்போதும் திமுக இரட்டை நிலைப்பாட்டில் தான் இருக்கும்இந்து அறநிலைத்துறை அதிமுக ஆட்சியில் அறமாக இருந்தது. இன்று அது கேலிகுத்தாக்கி வைத்துள்ளனர்.பழனியில் நடைபெற்ற மாநாட்டில் பலநாடுகளில் இருக்கும் முருக பக்தர்கள் அழைக்கப்படவில்லை.பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாடு என்பது திமுகவின் சுய விளம்பரத்திற்காக நடத்தப்பட்ட மாநாடு, கடவுளை ஏமாற்றுக்கின்ற மாநாடு.இதுவரை திமுகவின் ஆட்சியில் மக்களை ஏமாற்றி வந்தனர். தற்போது கடவுளை ஏமாற்ற முயற்சித்துள்ளனர் என்பது தான் இந்த மாநாட்டின் மூலம் நமக்கு கிடைத்த செய்து. திமுகவிற்கு கடவுள் தண்டனை கிடைக்கும் என்றார்.