விருதுநகரில் முதலமைச்சர் ஸ்டாலின், மக்களை சந்தித்த போது தனக்கு கைகொடுக்க வந்த தொண்டர் ஒருவரின் கையை தட்டிவிட்டு செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், இந்த வீடியோவை பகிர்ந்த எதிர்கட்சிகள்  ‘’இதுதான் சமத்துவமா?’’ என திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.


விருதுநகரில் முதலமைச்சர் ஸ்டாலின்:


தமிழக அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர்  ஸ்டாலின் கள ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் கோவையை தொடர்ந்து, இன்று விருதுநகருக்கு ஆய்வுக்காக சென்றுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அப்போது முதலமைச்சரை காண 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு காத்திருந்தனர். காரில் வந்த முதல்வர் பொதுமக்கள் மத்தியில் நடந்து சென்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். 


அப்போது முதல்வருக்கு கை குலுக்க வநதார் ஒருவர். அப்போது முதல்வர் கையசைக்கவே, உடனடியாக அந்த தொண்டரை, அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






எதிர்க்கட்சியினர் விமர்சனம்:


இந்த வீடியோவை பகிர்ந்த எதிர்க்கட்சியினர் ‘’தொண்டரின் கையை கூட முதல்வர் தொடமாட்டாரா, இதுதான் சமூக நீதியா? சமத்துவமா?’’ என காட்டமாக விமர்சித்துள்ளனர்.  மேலும் சிலர், பிற கட்சித் தலைவர்கள் தொண்டர்களுடன் இருப்பது போன்ற வீடியோவையும் பகிர்ந்து, வருகின்றனர்.  


ஆளும் கட்சியினர் விமர்சனம்:


இந்நிலையில், இதுகுறித்து  திமுகவினர் சிலர் தெரிவிக்கையில், முதல்வர் மக்களை சந்தித்து வந்த வேளையில் தடுப்பை மீறி, அந்த நபர் உள்ளே வந்ததால் பாதுகாப்பு கருதியே, முதல்வர் கைகுலுக்க மறுத்தார். முதலமைச்சர், தமிழ்நாட்டின் ஆட்சி பொறுப்பில் உச்சநிலையில் இருப்பவர், அவரை பார்க்கவும் , மனுக்களை கொடுக்க கூட்டம் கூடுவது இயல்புதான். ஆனால், ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி வந்து , என்ன செய்வார் என்று யாருக்கு தெரியும்; ஆயுதம் வைத்தால் என்ன செய்வது; இதேபோல், அனைவரும் பாதுகாப்பு வளையத்தை மீறி வந்தால், என்ன செய்வது எனவும், கேள்வி எழுப்பியுள்ளனர். 


மேலும் சிலர் , கை குலுக்காததற்கு விமர்சனம் வைப்பவர்கள், மாற்றுத்திறனாளியை கண்டதுமே , வாகனத்தில் இருந்து, கீழே இறங்கி மனுக்களை பெற்றிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்பட காட்சியை பகிர்ந்து வருகின்றனர் திமுகவினர்.




ஆகையால் தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.