ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் வாக்குறுதிகளை வாரி வழங்கி வருகிறது பாஜக. வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என பாஜக மூத்த தலைவரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர், ஹரியானாவை தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சியில் உள்ள ஜார்க்கண்டில் இரண்டு கட்டமாக, அதாவது நவம்பர் 13 மற்றும் 20ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.
வாரி வழங்கும் பாஜக:
ஜார்க்கண்டை பொறுத்தவரையில், ஒரே கூட்டணியில் இணைந்து போட்டியிட இந்தியா கூட்டணி தயாராகிவிட்டது. இந்தியா கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா கூட்டணியை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற பாஜக கூட்டணி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்:
இதற்காக, பல வாக்குறுதிகளை வாரி வழங்கி வருகிறது. இந்த நிலையில், குந்தியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "ஒரு வருடத்திற்கு இரண்டு எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
2,27,000 அரசுப் பணியிடங்கள் வெளிப்படைத் தன்மையுடன் நிரப்பப்படும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும் வகையில் மாதம் 2000 ரூபாய் அவர்களின் கணக்கில் 2 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யப்படும்" என்றார்.
இதையும் படிக்க: 4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்