கேரளாவின் மனோரமா செய்தி நிறுவனம் நடத்தும் கான்க்லேவ் 2022 நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வழியாக உரையாற்றினார். அந்த உரையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தியா மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சில தகவல்களை வழங்கினார். அவற்றை கீழே காணலாம்.
வீடியோ வாயிலாக :
- மாநில அரசுகளை தன்னிறைவு பெற்ற அரசாக வைத்திருந்தால் தான், இந்தியா மகிழ்ச்சியாக இருக்கும்.
- வலிமையான, வசதியான தொழிற் வளர்ச்சியடைந்த மாநிலங்களால் இந்தியாவிற்கு பயன்தான் தவிர, குறைவு அல்ல.
- இந்தியாவுக்கு ஒரே நாடு, ஒரே ஒரு தேசிய மொழி என்பது எப்போதும் சாத்தியமில்லை.
- இந்தியாவுடையை மொத்த வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு 9. 22 இருப்பதால், தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கே நன்மை.
- இந்தியா என்பது கூட்டாட்சி கோட்பாட்டை மதித்து நடக்க வேண்டும்; ஆனால், அதற்கு எதிரான செயல்கள் நடைபெறுகின்றன.
- வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் இந்தியாவின் தாரக மந்திரம்.
- மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் உறுதி
- மாநிலங்கள் சுயமாக தன்னிறைவு பெற்றவையாக இருப்பது தான் இந்தியாவிற்கு பலம்
- மக்களோடு நேரடி தொடர்பில் இருப்பவை மாநில அரசுகள்தான். மக்களின் அனைத்து அன்றாட தேவைகளையும் பார்த்து பார்த்து நிறைவேற்றும் கடமை மாநில அரசுக்குதான் உண்டு.
- மாநில அரசுகளை தன்னிறைவு பெற்ற அரசுகளாக வைத்திருந்தால்தான் இந்தியா மகிழ்ச்சியாக இருக்கும்.
- இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் காப்பதே, நாட்டை காப்பதாக அர்த்தம்.
கூட்டணி தொடரும் :
சிபிஎம் உடனான கூட்டணி தொடரும். எங்கள் இரு கட்சிகளுக்கிடையேயான கூட்டணி என்பது தேர்தலுக்கான கூட்டணி அல்ல.கொள்கைக்கான கூட்டணி. நாங்கள் இணக்கமாகவே இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்