கேரளாவின் மனோரமா செய்தி நிறுவனம் நடத்தும் கான்க்லேவ் 2022 நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வழியாக உரையாற்றினார். அந்த உரையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசும் போது, “ கொரோனா தொற்றினால், பயணத்தை தவிர்க்கும்படி மருத்துவர்கள் கூறியதால் தன்னால் அங்கு வரமுடியவில்லை என்பதை மலையாளத்தில் பேசிய முதல்வர்,
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் தாரக மந்திரம்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் தாரக மந்திரம். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் உறுதி. வேற்றுமையில் என்பதை பண்டித ஜவஹர்லால் நேரு தாரக மந்திரமாக கொண்டிருந்தார். இந்தியாவின் கூட்டாட்சி முறை குறித்து, நாட்டின் முதல் பிரதமர் நேரு,தொடர்ந்து பேசினார். நாட்டு மக்கள் ஒற்றுமையாக வாழ, மொழி வாரி மாநிலங்களை நேரு ஏற்படுத்தி தந்தார்
இந்தியா என்பது கூட்டாட்சி கோட்பாட்டை மதித்து நடக்க வேண்டும்; ஆனால், அதற்கு எதிரான செயல்கள் நடைபெறுகின்றன. நாடாளுமன்றத்தில் முக்கிய பொருள்கள் குறித்து பேசுவதற்கு, எம்.பிக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மாநிலங்கள் சுயமாக தன்னிறைவு பெற்றவையாக இருப்பது தான் இந்தியாவிற்கு
பலம் ஆகும். இந்தியாவுக்கு ஒரே ஒரு தேசிய மொழி என்பது எப்போதும் சாத்தியமில்லை.
ஒரே நாடு, ஒரே மொழி என்போர், நாட்டின் எதிரிகள் இந்தியாவுக்கு ஒரே ஒரு தேசிய மொழி என்பது எப்போதும் சாத்தியமில்லை. மாநிலங்கள் சுயமாக தன்னிறைவு பெற்றவையாக இருப்பது தான் இந்தியாவிற்கு பலம் ஆகும்.
கூட்டணி தொடரும்
சிபிஎம் உடனான கூட்டணி தொடரும். எங்கள் இரு கட்சிகளுக்கிடையேயான கூட்டணி என்பது தேர்தலுக்கான கூட்டணி அல்ல.கொள்கைக்கான கூட்டணி. நாங்கள் இணக்கமாகவே இருக்கிறோம்” என்று அவர் பேசினார்.