வி.கே.சசிகலா 

 

தமிழ்நாடில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக அரசு 20 மாத காலமாக மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் முறையாக செயல்படுத்தவில்லை எனவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கட்சி வெற்றிபெற வேண்டுமென வி.கே. சசிகலா வேன் மூலம் தொண்டர்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் வேனில் இருந்தபடியே பிரச்சாரம் செய்தார் அனைத்து இடங்களிலும் தொண்டர்கள் வி.கே.சசிகலா அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.



 

20 மாத கால ஆட்சியில்

 

அதிலும் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் வி.கே.சசிகலா வருகையின்போது கிரைன் மூலம் 100 அடி உயரத்தில் இருந்து மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொண்டர்களை சந்தித்து பேசிய வி.கே.சசிகலா அதிமுக ஆட்சியில் , ஜெயலலிதா இருந்தபோது மக்களுக்கான எண்ணற்ற திட்டங்களை வழங்கினார். பெண்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். ஆனால் தற்போது திமுக 20 மாத கால ஆட்சியில் அனைத்து அத்தியாவசிய பெருட்களிலும் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உறுவாகி உள்ளது. போதை பொருகளின் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது. திமுக அரசு 20 மாத காலத்தில் வரி என்ற பெயரில் மக்களிடம் இருந்து அதிகமாக வாங்குகிறார்களே தவிர மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. 



 

அதிமுக ஆட்சியில் தான் தமிழ்நாட்டு மக்கள் காப்பாற்றப்பட்டார்கள். ஆனால் தற்போது அந்த மாதிரியான நிலைமை இல்லை. ஆகவே அதிமுக மீண்டும் வந்ததால்தான் மக்களும் நிம்மதியாக இருக்க முடியும், ஏழை மக்களும் வாழ முடியும், ஆகவே கழகத்தினர் அனைவ்ரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும், இன்னும் 100 ஆண்டுகளை கடந்து மக்களுக்காகவே நாம் தொண்டாற்ற வேண்டும், என கூறினார்.

 

நமக்கு தெரியாது

 

இதனை அடுத்து செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா கூறுகையில், தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரை என்பது சட்டமன்றத்தில் இருந்து அனுப்பப்படும் உரையை ஆளுநர்  அலுவலகம் திருத்தம் செய்து அனுப்பும், மீண்டும் சட்டமன்றத்தில் அதை சரிபார்த்து அச்சிடுவது வழக்கம். அதை தான் ஆளுநர் சட்டமன்றத்தில் வாசிப்பார். ஆனால் இன்றைய தினம் ஆளுநரின் உரையில் என்ன இருந்தது என்பது நமக்கு தெரியாது ,இபிஎஸ், ஓபிஸ் 2 பேரும் அவர்களுக்குள் உள்ள பிரச்சனைக்காக வழக்கு தொடர்ந்துள்ளனர். அதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. என் சம்மந்தப்பட்ட வழக்கில் தீர்ப்புக்காக காத்திருக்கிறேன். 



தலைவர் கொண்டுவந்த  சட்ட திட்ட விதிகள் படி இருக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள், அதன்படிதான் எல்லாமே நடக்கும்என தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் உள்ள கரும்புகள் 6 அடி உயரம் வரை இருக்கவேண்டும் என தெரிவித்து அளவு குறைவாக உள்ள கரும்புகளை கொள்முதல் செய்யாமல் உள்ளனர். இதை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என தெரிவித்தார்.