Chengalpattu NEET Protest : கண் அசைத்த உதயநிதி.. போராட்டத்தில் குதித்த திமுக.. 4000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..
Chengalpattu NEET Protest : கண் அசைத்த உதயநிதி.. போராட்டத்தில் குதித்த திமுக.. 4000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..
கிஷோர் Updated at:
20 Aug 2023 09:11 PM (IST)
Chengalpattu DMK : நீட் தேர்வு ரத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுகவின் பல்வேறு அணிகள் சார்பில் அறிவிக்கப்பட்ட உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்று முடிந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் நீட் தேர்வு காரணமாக மாணவ ஜெகதீசன் மற்றும் அவருடைய தந்தை செல்வம் ஆகிய இருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுவரை நீட் தேர்வால், தமிழகத்தில் 21 மாணவர்கள் தற்கொலை செய்ய கொண்டுள்ளனர். இந்தநிலையில் , தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள, நீட் தேர்வைத் திணிக்கும் மத்திய பாஜக அரசு, ஆளுநரை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில், திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அந்தவகையில் , செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனை அருகே, திமுக இளைஞரணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது . இதில் திமுகவை சேர்ந்த 4000- க்கும் மேற்பட்ட திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. இப் போராட்டத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் துவங்கி வைத்தார்.
இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் , செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் .ஆர் .ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி, உள்ளிட்ட ஏராளமான மக்கள் பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேபோன்று திமுகவின் கூட்டணி கட்சிகளான , விசிக , கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் உயிரிழந்த ஜெகதீசனின் நண்பரான மருத்துவக் கல்லூரி மாணவர் பயாசுதீன் இப்போராட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
திமுக உண்ணாவிரத போராட்டம்
நீட் தேர்வு விவகாரம்; ஆளுநர் வெறும் தபால்காரர்தான்- முதல்வர் ஸ்டாலின் காட்டம்
நீட் தேர்வு விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கே முழு அதிகாரம் உள்ளதாகவும் ஆளுநர் வெறும் தபால் காரர்தான் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட்டுக்கு எதிராக ஆளுங்கட்சியே அறப்போர் நடத்த வேண்டிய சூழல் உள்ளதாகவும் முதல்வர் வேதனை தெரிவித்துள்ளார். சென்னை, அண்ணா நகரில் நடைபெற்று வரும் திருமண விழாவொன்றில் கலந்துகொண்டு முதல்வர் பேசி வருகிறார்.
அப்போது அவர் கூறியதாவது: ’’திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் விலக்கு மசோதாவை பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். அதை நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும்வரை திமுக ஓயாது.
நீட் தேர்வு விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கே முழு அதிகாரம் உள்ளது. ஆளுநர் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவரிடம் கொண்டு சேர்க்கும் வெறும் தபால் காரர்தான். நீட்டுக்கு எதிராக ஆளுங்கட்சியே அறப்போர் நடத்த வேண்டிய சூழல் உள்ளது’’. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.