கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல் போட்டியிடுகிறார். இன்று இறுதி நாள் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மற்ற வேட்பாளர்களை போலவே நடிகர் கமலுக்கும் அவரது ஆதரவாளர்கள் வினோத பிரசாரங்களை முன்னெடுத்தனர்.




குறிப்பாக அவரது மகள் அக்ஷராஹாசன் மற்றும் அண்ணன் மகள் சுகாஷினி மணிரெத்தினம் ஆகியோர் குத்தாட்டம் போட்டு வாக்கு சேகரித்தது வைரலாகி வருகிறது.




மேளதாளம் முழங்க கோவை தெற்கு தொகுதியில் வீதி வீதியாக வந்த இருவரும், தொண்டர் புடைசூழ நடுவே நின்று டார்ச் லைட் சின்னத்துடன் குத்தாட்டம் போட்டனர். சினிமா பிரபலமான இருவரின் குத்தாட்டத்தை வீடுகளில் இருந்தவாறு வாக்காளர்கள் ரசித்தனர்.