திமுக சார்பில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கே.என். நேரு மீது முசிறி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் நேற்றோடு நிறைவடைந்த நிலையில் நாளை நடக்கவிருக்கும் வாக்கெடுப்புக்கான பணி முழுவீச்சில் நடந்து வருகின்றது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வாட்ஸ்ஆப்பில் ஆபாசமாக பேசியதாக கூறி கே.என் நேரு மீது தேர்தல் அதிகாரிகள் புகார் அளித்தனர்.
<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி மேற்கு, காட்பாடி, திருவண்ணாமலை தொகுதிகளில் அதிக பணப்பட்டுவாடா நடைபெறுவதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் - தேர்தல் ஆணையத்தில் கழகத்தின் சார்பில் மாண்புமிகு அமைச்சர் திரு. ஜெயக்குமார் அவர்கள் கடிதம்.</p>— AIADMK (@AIADMKOfficial) <a >April 5, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
இந்நிலையில் அதிகாரிகள் அந்த புகாரின் அடிப்படையில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கே.என். நேரு மீது முசிறி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு முக்கிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பதிவில்
'கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி மேற்கு, காட்பாடி, திருவண்ணாமலை தொகுதிகளில் அதிக பணப்பட்டுவாடா நடைபெறுவதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் - தேர்தல் ஆணையத்தில் கழகத்தின் சார்பில் மாண்புமிகு அமைச்சர் திரு. ஜெயக்குமார் கடிதம்' அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.