இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா தொற்று பாதிப்பு, கடந்த மார்ச் மாதம் முதல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களில் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதில், மகாராஷ்டிராவில் இன்று முதல் இரவு நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மேலும், இந்தியாவில் முதல்முறையாக தினசரி கொரோனா தொற்று பாதிப்பு இன்று ஒரு லட்சத்தை கடந்தது குறிப்பிடத்தக்கது.




இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஏப்ரல் 8ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளர். இந்த ஆலோசனை காணொலி மூலம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளது.