சர்வதேச ரேஸரும்,  பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு பிரிவு மாநிலச் செயலாளர் அலிஷா அப்துல்லா மற்றும் அவரது கணவர் நவீன் சென்னை தி நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.


சமூகவலைதளங்களில் தாக்குதல்:


இது குறித்து பேசிய நவீன்,


கடந்த சில நாட்களாக அலிஷா, போலி மருத்துவர் என்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது எனவும் அலிஷாவின் குடும்பத்தினரை தாக்கும் விதமாக சமூகவலைதளங்களில் தன்னை தாக்குவதாக தெரிவித்தார் 


மருத்துவ சான்றிதழ் இல்லாமல் ஊசி போடுகிறார் என்று தெரிவித்து வருகின்றனர். அவை அனைத்தும் அவர்களின் சுய லாபத்திற்கும் அரசியலுக்கும் பரப்பப்படும் வதந்திகள் என தெரிவித்தார் 


”நான் மருத்துவர் என்று சொல்லவில்லை”


என்னுடைய கிளினிக் சான்றிதழ் , மெடிக்கல் கவுன்சில் அளித்த சான்றிதழ் எல்லா பேட்டிகளிலும் நான் 3-ஆம் ஆண்டு மருத்துவ படிப்பு என்றுதான் சொல்லி இருக்கிறேன். நான் மருத்துவர் என்று சொல்லவில்லை எனவும் தான் ஒரு விளையாட்டு வீராங்கனை என்றே கூறியதாக தெரிவித்தார்.


மேலும், தனது மருத்துவ படிப்பினை BE MS , டெல்லியில் படித்துக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்


தான் சிறுபான்மையினர், முஸ்லிம் என்றும் பாஜகவில் இருப்பதால் இப்படி எல்லாம் பேசுகிறார்கள்” என கூறினார்
எதற்கு நீங்கள் அரசியலுக்கு வந்தீர்கள் என்று முதலில் எல்லாரும் கேட்டார்கள். தம்மை போன்ற பெண்களுக்கு விளையாட்டு துறையில் அல்லது அரசியலில் வர  முன்னோடியாக இருப்பேன் என்று தெரிவித்தார். மேலும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மகன்தான் இப்படி செய்வது எனவும் குற்றம் சாற்றினார்.


”கட்சி ரீதியாக எனக்கு 100% ஒத்துழைப்பு உள்ளது. தலைவர் அண்ணாமலை இல்லை என்றால், நான் அரசியலில் இருந்து இருக்க மாட்டேன். காயத்ரி ரகுராம் பல தவறான கருத்துகளை கட்சிக்கு எதிராக பரப்பி வருகிறார்.


என் பிரச்சனை நான்தான் பேச வேண்டும். எனக்காக அவர் பேச வேண்டியதில்லை அவர் என் உடன் இருந்து எனக்கு உறுதுணையாக இருக்கிறார்.


பாஜகவில்  சில சட்டங்கள் உள்ளது. ஒரு பிரச்சனை என்றால் அதற்கு நேரமாகும், அதனை சரி செய்ய, பிரியா இறப்புக்கு காரணமாக இருந்த மருத்துவர்கள் முகம் தெரியப்படுத்தவில்லை, ஏனென்றால் அவர்களுக்கு சங்கம் துணை இருக்கிறது. ஆனால், அலிஷா தனது ட்விட்டர் பதிவு ஒன்றில், இந்திய மோட்டார் பந்தய வீரராக, பெண் தொழில்முனைவோராக, மருத்துவர் கனவுடன் மற்றும் அரசியல்வாதியாக, எனது பிராண்டின் முகமாக இருப்பதில் பெருமிதம் என் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது






”பெண்கள் அரசியலில் குறைவு”


”அழகுக்கலை சம்பந்தபட்ட விஷயங்கள் தான் அலிஷா செய்தார். கிளினிக்கில் வேறு மருத்துவர்கள்தான் மருத்துவம் செய்கிறார்கள், புகைப்படங்கள் விளம்பரத்திற்கு எடுத்தது என அலிஷா கணவர் நவீன் தெரிவித்தார்.


பெண்கள் அரசியலில் குறைவு, ஆதரவு கொடுங்கள் திமுக ஏன் என்னை குறி வைத்து தப்பாக விமர்சனம் செய்கிறார்கள். பாஜக கட்சி வந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது. ஆனால் நான் இந்த புகைப்படம் அதற்கு முன் எடுத்தது. அப்போது யாரும் பேசவில்லை” என பேசினார்.