தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தி தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைத்து வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் நோக்கம் என்பதால், ஆளுநரை ஒன்றிய அரசு பயன்படுத்துவதாக எம்.பி ரவிக்குமார் குற்றச்சாட்டு வைத்துள்ளார் .
விழுப்புரத்தில் எம்.பி ரவிக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மனித குளம் வாழ்ந்தற்கான தொன்மை வாய்ந்த திருவக்கரை கல்மரம் பூங்காவினை மத்திய அரசு எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து சட்ட மசோதாவை அறிமுகபடுத்த பொதுமக்களிடம் கருத்து கேட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்ப்புகளை பதிவு செய்ய உள்ளதாகவும், மத்திய புவியியல் வளங்களை முழுமையாக எடுத்து ஜியோ ஹெரிடேச்ஜ் என்று மாற்றுவதற்கு எதிர்ப்பினை தெரிவிப்பதாகவும் இதற்கு தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தினார். ஏற்கனவே மத்திய அரசின் கீழ் உள்ள தொல்லியல் கட்டுப்பாடு கோவில்கள் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்த நிலையில் உள்ளதால், இதனை மத்திய அரசின் சட்டமசோதாவினை எதிர்பதாக கூறினார்.
தமிழக ஆளுநர் இந்திய ஒன்றிய பாஜகவின் முகவராகவும், அரசியல் நபராகவும் அரசியலமைப்பு சட்டத்தினை அவமதிக்கும் செயலாக அவரின் செயல்பாடுகள் உள்ளது. தமிழ்நாட்டினையும் தமிழக மக்களையும், தமிழக அரசினையும் அம்பேத்கரையும், சட்டத்தினை அவமதிக்கும் செயலாகவும், ஆளுநர் நடந்து கொள்கிறார். அவர் தெரியாமல் நடந்து கொள்ளவில்லை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தி தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைத்து வளர்ச்சியை தடுக்கும் வகையில் பாஜகவின் நோக்கம், அதற்காக தான் ஆளுநரை பயன் படுத்துவதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டு மக்களின் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி, ஆளுநரால் நடந்து இருப்பது அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவரால் தமிழ் மக்களை கூர்தீட்டி விட்டிருப்பாதகவும் கூறினார். திரைத்துறை கார்பரேட் மயமாகி கொண்டிருப்பதாகவும், பெரிய அளவில் முதலீடு செய்பவர்கள் தான் எந்த தொழிலையும் செய்யக்கூடிய நிலை ஏற்பட்டிருப்பதால் சிறுகுறு தொழில் பாதிக்கபட்டுள்ளனர். இது திரைத்துறையிலும் எதிரொலிப்பதால் மாற்று சிந்தனைகள் உள்ள கலை படைப்புகள் வெளி வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆரோக்கியமானது இல்லை என்பதால் பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவரும் நேரத்தில் சிறிய பட்ஜெட் படங்கள் வெளிவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்