பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத்தலைவர் ஏ.ஜி.சம்பத், விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: "தி.மு.க. தலைவர் ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டித்தருவோம் என்று விக்கிரவாண்டி இடைத் தேர்தலின்போதே குறிப்பிட்டார். ஆட்சிக்கு வந்த 3 மாதங்களுக்கு பிறகு விழுப்புரத்தில் ஏ.கோவிந்தசாமிக்கு மணி மண்டபமும், இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மணிமண்டபமும் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், ஒன்றரை ஆண்டுகள் உருண்டோடி விட்டது, அதற்காக என்ன செய்தார் என்றே தெரியவில்லை.
இந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி, இடம் பார்ப்பதாக சொல்லி 20 கார்களுடன் சென்று விளம்பரப்படுத்திக் கொண்டார். இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இதற்கான காரணம் அரசியலாகக்கூட இருக்கலாம். நிச்சயம் அதை நிறைவேற்றுவோர் என்று நம்புகிறோம். தி.மு.க. அமைச்சர்கள் இந்துக்கள் என்றால் வேசி என்கிறார்கள், பஸ்சில் சென்றால் ஓசி என்கிறார்கள், இப்படி ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்டால் டேக்கிட் இசி என்கிறார்கள். மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும். தி.மு.க.வில் இருந்த மூத்தத் தலைவர்கள் என்றைக்காவது இதுபோன்று பேசியது உண்டா? இதுபோன்று அவதூறான வார்த்தைகளை உச்சரிக்கக்கூடாது என்று ஸ்டாலின், தனது சகாக்களுக்கு கட்டளையிட வேண்டும்.
அவர் கண்டிக்கத் தவறினால் மக்கள் நிச்சயம் தண்டிப்பார்கள், அது தேர்தலாக இருக்கலாம், அல்லது போராட்டமாகவும் இருக்கலாம். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தன்மையை புரிந்துகொள்ளாதவர்கள் ஏதேதோ பேசுகிறார்கள். அந்த இயக்கம் பிரிட்டிஷ் சர்க்காரை எதிர்க்க உருவாக்கப்பட்ட இயக்கம். சுதந்திரத்திற்கு முன்பு எதைச் சொன்னார்களோ அதைத்தான் இன்றும் சொல்கிறார்கள். அது தேசிய இயக்கம், புனிதமான இயக்கம்.
இதையெல்லாம் ஸ்டாலின் புரிந்துகொள்வார் என்று நம்புகிறோம். எதிர்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்க நிகழ்ச்சியை ஸ்டாலினே தொடங்கி வைப்பார். தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துள்ளது, மின் கட்டணத்தையும் உயர்த்திவிட்டனர், பஸ் கட்டணத்தையும் உயர்த்த போகிறார்கள். இவற்றையெல்லாம் திசைதிருப்பவே மதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். விழுப்புரத்தில் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழாவில் அவரது மகன் என்ற முறையில் நான் கலந்துகொள்வேன் என்று அவர் கூறினார்.
“பொறுப்பு; ஆட்சி; பென்ஷன் பணம் - பறிபோனால் நாங்கள் பொறுப்பல்ல” - வெளிப்படையாக மிரட்டும் அண்ணாமலை
பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயதும் இனி 60.. அமலுக்கு கொண்டுவந்த தமிழ்நாடு அரசு..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்