தமிழக பா,ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு இன்று 37வது பிறந்தநாள் ஆகும். இதையடுத்து, பா.ஜ.க. தலைவர்களும், பா.ஜ.க.வினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக பா.ஜ.க.வின் நிர்வாகிகளில் ஒருவரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் அண்ணாமலைக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.


பிறந்தநாள் வாழ்த்து 


அதில், அவர் கூறியிருப்பதாவது,


“ இந்தியாவின் வருங்கால பிரதமர் அல்லது பாதுகாப்பு அமைச்சர் அல்லது எம்.பி., அல்லது முதல்வர் அல்லது எம்.எல்.ஏ. அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


நம்பிக்கையின்மையில் இருந்து நம்பிக்கை வரை, பார்ப்பனிய மனநிலையில் இருந்து தேசம்தான் முதல் வரை, ஒருதலை பட்சம் முதல் முழுமையான வளர்ச்சி வரை, இருளில் இருந்து ஒளி வரை, விஸ்வகுரூ”


என்று அண்ணாமலைக்கு புகழாரம் பாடியுள்ளார். அவரது டுவிட்டர் பதிவுக்கு கீழ் பலரும் பலவிதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 






 


ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பு வகித்து விருப்ப ஓய்வு பெற்றவர் அண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு பா.ஜ.க.வினர் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க.வில் இணைந்த அண்ணாமலைக்கு சில நாட்களிலே கட்சியின் துணைத்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. முருகன் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழக பா.ஜ.க. தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அண்ணாமலை தி.மு.க. வேட்பாளரிடம் வெற்றியை பறிகொடுத்தார். 


மேலும் படிக்க : ‛பாஜக காக்கா கூட்டம்... பதவிக்கு ஓடும் அண்ணாமலை...தனித்து நிற்க அதிமுக தயார்’ -செல்லூர் ராஜூ தாக்கு!


மேலும் படிக்க : Video : ”கட்சி மாறி மாறி போறவங்க அறிவுரை எங்களுக்கு தேவையில்லை” வி.பி. துரைசாமியை சாடிய ஈபிஎஸ்




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண