சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படும் அளவுக்கு இல்லை என்றும், பாஜக மட்டும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கருத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் ராயப்பேட்டை அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும், அமைப்பு செயலாளருமான பொன்னையன் பேசியது பாஜகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதாவது பாஜக அதிமுகவின் கூட்டணி கட்சிதான் என்றாலும், அக்கட்சி தமிழகத்தில் வளர்வது அதிமுகவுக்கு- திராவிட கொள்கைகளுக்கு- தமிழக நலனுக்கு நல்லதல்ல என்று கூறினார்.
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர நினைப்பதை மக்கள் விரும்ப மாட்டார்கள். பாஜக எதிர்க்கட்சி என்ற மாயை பிம்பம் உருவாக்கப்படுகிறது. இதனை நம்முடைய ஐடி விங் நிர்வாகிகள் முறியடிக்க வேண்டும் என பொன்னையன் தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்து குறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழகத்தில் பாஜக வளர்கிறது. ஆனால் பொன்னையன் வளரவில்லை என்ற ஆதங்கத்தில் அவர் பேசியதாக விமர்சித்திருந்தார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், துரைசாமி அதிமுகவிற்கு சான்றிதழ் வழங்க வேண்டியதில்லை.அ.தி.மு.க., மக்கள் பிரச்னைகளை பேரவையில் எப்படி எழுப்புகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதே நேரத்தில், பா.ஜ.,வின் சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டசபையில் எப்படி செயல்படுகிறார் என்பது, மக்களுக்கு நன்றாக தெரியும்,'' என்றார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கட்சி கூட்டணி வைத்து தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தது. ஆனால், அதன்பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவினர் தனித்து போட்டியிட்டனர். இருப்பினும் பெரும்பாலான இடங்களில் ஆளும்கட்சியான திமுகவினர் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இந்தநிலையில் ஒரே கூட்டணியில் உள்ள அதிமுக - பாஜக தலைவர்களின் கருத்து மோதலால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்