Bihar Election 2025: கடந்த தேர்தலில் 11 இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பளித்த நிதிஷ்குமார், அந்த எண்ணிக்கையை தற்போது 4 ஆக குறைத்துள்ளார். 

Continues below advertisement

44 புதிய வேட்பாளர்களை அறிவித்த நிதிஷ்

பீகார் சட்டமன்ற தேர்தலில் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள, பாஜக மற்றும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்  கட்சிகள் தலா 101 இடங்களில் வெற்றி போட்டியிட உள்ளன. இதையொட்டி முதற்கட்டமாக 57 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை நிதிஷ்குமார் வெளியிட்டார். சமூக வாக்குகளை கருத்தில் கொண்டு, பல்வேறு தரப்பினருக்கும் அதில் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இஸ்லாமியர்கள் சார்பில் ஒரு வேட்பாளர் கூட இடம்பெறாமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜகவை பின்பற்றி அவர்களது கூட்டணியில் உள்ள, நிதிஷ்குமாரும் சிறுபான்மையினர்களை ஒதுக்குவதாக குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் தான், மீதமுள்ள 44 தொகுதிகளுக்கான புதிய வேட்பாளர்கள் பட்டியலை நிதிஷ்குமார் வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

நட்சத்திர வேட்பாளர்கள் 

இரண்டாவது வேட்பாளர்கள் பட்டியலின்படி,  மூத்த தலைவர் பிஜேந்திர பிரசாத் யாதவ் சுபாலில் இருந்து போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு சுயேச்சையாக வெற்றி பெற்ற அமைச்சர் சுமித் சிங், இந்த முறை சக்காய் சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட உள்ளார். பட்டியலில் உள்ள மற்ற அமைச்சர்கள் செயின்பூரைச் சேர்ந்த ஜமா கான், அமர்பூரைச் சேர்ந்த ஜெயந்த் ராஜ் மற்றும் தம்தாவைச் சேர்ந்த லெசி சிங் ஆகியோர் அடங்குவர். இதற்கிடையில், வசிஷ்டா சிங் கர்கஹாரிலிருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் பூலோ மண்டல் கோபால்பூரிலிருந்து கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துவார். முக்கிய  திருப்பமாக கோபால் மண்டலின் டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Bihar Election 2025: சப்போர்ட் பண்ணாத மைனாரிட்டீஸ்? பாஜகவாக மாறிய நிதிஷ்? ஒரு இஸ்லாமியருக்கும் வாய்ப்பு இல்லை

சாதியும் இருக்கு..சாமியும் இருக்கு..

கட்சியின் வேட்பாளர் பட்டியல் சமூக சமநிலை மற்றும் பிரதிநிதித்துவத்தில் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதன்படி இறுதி வேட்பாளர் பட்டியலில் 37 ஓபிசிக்கள், 22 மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொதுப் பிரிவில் இருந்து 22 வேட்பாளர்கள், பட்டியல் சாதியினரில் இருந்து 15 பேர் மற்றும் பட்டியல் பழங்குடியினரில் இருந்து ஒருவர் உள்ளனர். கூடுதலாக, அக்கட்சி நான்கு இஸ்லாமிய வேட்பாளர்களை நிறுத்தி விமர்சனங்களுக்கு பதிலடி அளித்துள்ளது. அதன்படி,  அமூரிலிருந்து சபா ஜாபர், ஜோகிஹாட்டிலிருந்து மன்சார் ஆலம், அராரியாவிலிருந்து ஷகுப்தா அசிம் மற்றும் செயின்பூரிலிருந்து முகமது ஜமா கான் போட்டியிடுகின்றனர்.

பெண்கள் வலுவான பிரதிநிதித்துவத்தையும் பெற்றுள்ளனர். இந்த கட்டத்தில் ஒன்பது பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது பீகாரின் அரசியல் துறையில் பாலின உள்ளடக்கத்தை அதிக அளவில் சேர்ப்பதற்கான ஜேடியுவின் திட்டத்தை பிரதிபலிக்கிறது.

பீகார் சட்டமன்ற தேர்தல்: அனல் பறக்கும் களம்

243 உறுப்பினர்களுக்கான பீகார் சட்டமன்றத் தேர்தலில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் நவம்பர் 14 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இந்தியாவில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்ற மாநிலங்களில் ஒன்றான பீகாரில், பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஒரு உறுதியான எதிர்க்கட்சியை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இதில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி சரியுமா? ஆளுங்கட்சிக்கு ஷாக் கொடுக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.