தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை 500 கோடி ரூபாய் நஷ்டஈடு தரக்கோரி அவருக்கு பிஜிஆர் எனர்ஜி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் டுவிட்டரில் வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் முதல் இருவரும் டுவிட்டரில் வார்த்தைகளில் விளையாடி வந்தனர். மின்சார கொள்முதலில் ஊழல் நடப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அண்ணாமாலை குற்றச்சாட்டு வைத்ததில் இருந்து இருவரும் வார்த்தைபோரில் மீறி வருகின்றனர். 


பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்துக்கு மின்சார வாரியம் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளதாக கூறிய அண்ணாமலை, அதுதொடர்பான ஆவணங்களை வெளியிட்டார். அண்ணாமலையின் ஆதாரங்கள் அடிப்படை ஆதாரமற்றவை இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி கூறினார்.


இந்த நிலையில், அண்ணாமலையிடம் 500 ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பிஜிஆர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடிப்படை ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் கருத்து தெரிவித்ததாக நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது. பிஜிஆர் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் மூலம் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த அண்ணாமலை, அதற்கு வித்தியாசமாக பதிலளித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,  ‘சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றீர்கள். நான் ஒரு சாதாரண விவசாயி என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான். திமுக அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை. நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது. சந்திப்போம்’ எனப் பதிவிட்டுள்ளார்.


 






அண்ணாமலையின் இந்த டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது. அத்துடன் அவருக்கு எதிராகவும், ஆதரவாகவும் விமர்சனமும் செய்யப்பட்டு வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண