தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை வகிக்கும்  தேசிய ஜனநாயக ஜனநாயகக் கூட்ணியில்  பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ்,  பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம் , புரட்சி பாரதம், பசும்பொன் தேசிய கழகம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றாக தேர்தலை சந்தித்தன.

  

 திராவிட முன்னேற்றக் கழகம் தலைமயிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில்  இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி,  இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்),  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் , இந்திய யூனியன் முசுலீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி,  மனிதநேய மக்கள் கட்சி,  அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி,  மக்கள் விடுதலைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தன.   

1957 வருட தேர்தலுக்குப் பிறகு, நடைபெற்ற அனைத்து  சட்டமன்றத் தேர்தல்களிலும் திமுக, அதிமுக என்ற இரண்டு பெரியத் திராவிட கட்சிகள் ஒட்டுமொத்த வாங்கு வங்கியில் 60- 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வருகின்றன. திராவிடர் என்ற கருத்தியல் தமிழக அரசியலை வழிநடத்தி வருகிறது.   

1990களில் இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் கொள்கையை தமிழக அரசு வழிமொழிந்தது.  சென்னை இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக உருவாகியது. செல்ஃபோன் மற்றும் கணினி வருகையால் கோயம்பத்தூர், சேலம், மதுரை, திருச்சி போன்ற மாவட்டங்களில் அன்றாட வாழ்க்கை முறை நவீனத்துவம் பெறத் தொடங்கியது.   

இது தமிழக அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியது. பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் தமிழக அரசியலில் கால் பதிக்கத் தொடங்கின. இந்த கட்சிகளின் வருகை தமிழக அரசியலை மேலும் ஆழமாக்கியது. அடையாள அரசியல் புதுப்பிக்கப்பட்டது. ஓட்டுகள் நாலாபுறமும் சிதற ஆரம்பித்தது. கூட்டணிக் கட்சிகளின் அவசியத்தை திமுக, அதிமுக உணரத் தொடங்கியது. 1989 முதல் 2011 வரை நடைபெற்ற தேர்தலிகளில், கிட்டத்தட்ட 491 இடங்கள் 10% சதவிகித வாக்கு வித்தியாசங்கள் முடிவை தீர்மானித்ததாக  அரசியல் ஆய்வாளர் சி.மணிகண்டன் தனது ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்தார். அதேபோன்று, வெறும் 5% வாக்கு வித்தியாசங்கள் 254 இடங்களில் வெற்றியைத் தீர்மானித்திருக்கின்றன.

இந்த போக்கு திராவிட அரசியலின் அடிப்படை போக்கை மாற்றியமைக்கத் தொடங்கியது. ஒரு தொகுதியில் சமூக அளவில் ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தை சேர்ந்தவர்கள் திமுக, அதிமுக தங்கள் வேட்பாளர்களாக களம் இறக்கத் தொடங்கினர்.                   

உதாரணமாக, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 25 வருடங்களாக  ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களையே வேட்பாளாராக நிறுத்தப்பட்டு வருகின்றனர்.     

திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில், 2006, 2016 தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெறும் 606 மற்றும் 601 வித்தியாசத்தில் தோல்வியைச்  சந்தித்தார். இந்த தொகுதியில், கடந்த 25 ஆண்டுகளாக திமுக, அதிமுக சார்பாக பிள்ளைமார் மற்றும் முக்குலத்தோர் சமூகத்தினர் மட்டுமே களமிறக்கப்படுகின்றனர்.               

அம்பாசமுத்திரம் 

சட்டமன்றத் தேர்தல் திமுக வேட்பாளர்  அதிமுக   தேர்தல் முடிவுகள்   
1996 முக்குலத்தோர் முக்குலத்தோர் திமுக வெற்றி   
2001 முக்குலத்தோர் நாடார்  அதிமுக வெற்றி   
2006 முக்குலத்தோர் முக்குலத்தோர் திமுக வெற்றி   
2011 முக்குலத்தோர் முக்குலத்தோர் அதிமுக வெற்றி    
2016 முக்குலத்தோர் முக்குலத்தோர் அதிமுக வெற்றி   
2021 முக்குலத்தோர் முக்குலத்தோர்    

 

எவ்வாறாயினும், திருநெல்வேலி மாவட்டத்தில் வேறு சில அரசியல் போக்குகளும் காணப்படுகிறது. உதாரணமாக, பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் கடந்த 25 வருடங்களாக இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த திமுக வேட்பாளர் வெற்றி வாகையை சூடியுள்ளார். முதலில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவரை வேட்பாளாராக நிறுத்திய அதிமுக, 2006 சட்டமன்றத் தேர்தலில் இஸ்லாமியர் வேட்பாளரை அறிவித்தது.  அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக பாளையங்கோட்டையில் தனது இருத்தலை அதிகரிக்க முயற்சி செய்துவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது . 

பாளையம்கோட்டை   

சட்டமன்றத் தேர்தல் திமுக வேட்பாளர்  அதிமுக   முடிவுகள்    
1996 இஸ்லாமியர்  முக்குலத்தோர் திமுக வெற்றி   
2001 இஸ்லாமியர்  முக்குலத்தோர் திமுக வெற்றி   
2006 இஸ்லாமியர்  இஸ்லாமியர்  திமுக வெற்றி   
2011 இஸ்லாமியர்  போட்டியிடவில்லை   திமுக வெற்றி   
2016 இஸ்லாமியர்  இஸ்லாமியர்  திமுக வெற்றி   
2021 இஸ்லாமியர்  கிறித்துவர்     

 

திருநெல்வேலி: 

சட்டமன்றத் தேர்தல்   திமுக  அதிமுக  தேர்தல் முடிவுகள் 
1996 பிள்ளைமார்  முக்குலத்தோர் திமுக வெற்றி 
2001 பிள்ளைமார்   முக்குலத்தோர் அதிமுக வெற்றி 
2006 முக்குலத்தோர் முக்குலத்தோர் திமுக வெற்றி 
2011 பிள்ளைமார் முக்குலத்தோர் அதிமுக வெற்றி 
2016 பிள்ளைமார் முக்குலத்தோர் திமுக வெற்றி 
2021 பிள்ளைமார் போட்டியிடவில்லை  

 

பொதுவாக, சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் திருநெல்வலி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி பலம் வாய்ந்ததாகவே இருந்தது. நாங்குநேரி தொகுதியில் நாடார் சமூக வேட்பாளர்கள் மட்டுமே களம் இறக்கப்படுகின்றனர். கடந்த  25 ஆண்டுகாக இந்த தொகுதியில் திமுக தனது வேட்பாளாரை நிறுத்தவில்லை. காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது. திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் போலல்லாமல் இந்த தொகுதியில் வெற்றி வாக்கு வித்தியாசம் அதிகமாக உள்ளது.         

நாங்குநேரி: (Victory margin அதிகம்)

சட்டமன்றத் தேர்தல்  திமுக  அதிமுக  தேர்தல் முடிவுகள் 
1996 திமுக போட்டியிடவில்லை  நாடார்  திமுக கூட்டணி
2001 திமுக போட்டியிடவில்லை  நாடார்  அதிமுக 
2006 திமுக போட்டியிடவில்லை  (காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் - நாடார் ) நாடார்  திமுக கூட்டணி  வெற்றி
2011 திமுக போட்டியிடவில்லை 

போட்டியிடவில்லை (நாடார் வேட்பாளர் )

அதிமுக வெற்றி
2016 திமுக போட்டியிடவில்லை   அதிமுக போட்டியிடவில்லை (கூட்டணி ) 3-வது அணி காங்கிரஸ் வேட்பாளர்  வெற்றி  
2019 இடைத்தேர்தல்   திமுக போட்டியிடவில்லை (கூட்டணி) நாடார்   அதிமுக வெற்றி 

 

தரவுகள்: 

1. தேர்தல் ஆணையம் கையேடு 

2. C. manikandan Caste in Political Recuritment  Phd Dissertation

3. திருநேல்வேலி மக்கள் தொகை கணக்கெடுப்பு  அறிக்கை