சேலம் மாநகர் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, சேலம் மாவட்டத்தில் நீண்டநாள் பிரச்சனை குறித்து பேசி வருகிறேன், எந்த பிரச்சினைக்கும் தீர்வு வரவில்லை. மேட்டூர்-சேலம் உபரிநீர் திட்டம் ஆண்டுதோறும் சராசரியாக காவிரியில் 100 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதில் ஐந்து டிஎம்சி தண்ணீர் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரியில் நிரப்பும் திட்டம் தான். கடந்த கால ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை முதற்கட்டமாக அறிவித்தார். இது சேலம் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும். எனவே காலநிலை பருவநிலை மாற்றத்தால் வரும் காலத்தில் கடும் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. இத்திட்டம் நிறைவேற்றினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கவேண்டும் தொடர்ச்சியாக பாமக சார்பாக பல்வேறு போராட்டங்கள் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை ஜாதி வரி கணக்கெடுப்பு அறிவிக்கப்படவில்லை, எடுத்துக்காட்டாக பீகார் மாநிலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பை எடுத்து புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் ஆந்திரா, ஒடிசா மாநிலங்கள் அறிவித்து பணிகள் நடைபெற்று வருகிறது.எதற்காக தமிழக முதலமைச்சர் செய்யமுடியாது என்று மத்தியஅரசு தான் செய்யமுடியும் என்று தவறான செய்தியை கூறி வருகிறார். ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஒவ்வொரு சமுதாயம் எந்த நிலையில் உள்ளது என்பதுதான். இடஒதுக்கீட்டால் எந்தந்த சமுதாயங்கள் பயன்பெற்றுள்ளது, கூடுதல் சலுகைகள் கொடுத்தல் உள்ளிட்டவைகள் தான்
முக்கியவத்துவம் வாய்ந்தவை ஆகும். இதை செய்வதற்கு திமுக அரசு தயங்கி கொண்டுள்ளது என்றும் பேசினார். மேலும் திமுகவிற்கு எல்லாம் புரிகிறது, மத்திய அரசுதான் செய்யவேண்டும் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஒருமித்த கருத்து உள்ளவர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம். பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து முறைகேடு நடைபெற்று வருகிறது. பெரியார் பல்கலைகழகத்தில் பெரியார் பற்றி புத்தகம் வெளியிட்டதற்கு தவறு என்று துணைவேந்தர் உள்ளிட்டோர் தவறு என்று பேசுவது, இதைவிட மோசடி எங்கும் நடக்காது. இவ்வாறு மோசமான சூழல் பெரியார் பல்கலைக்கழகத்தில் நிலவி வருகிறது. எனவே தமிழக அரசும், ஆளுநரும் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும்" என்றார்.
மேலும், மேட்டூர் அணையில் தூர்வார வேண்டும், அறிவிப்பு வந்ததை விட தவிர நடவடிக்கை எதுவுமில்லை என்றும் பேசினார். சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 6000 நிவாரணம் வழங்கும் மாவட்டங்களில் டாஸ்மாக் கடையை மூடவேண்டும் குறைந்தது ஒரு வாரமாவது மூடவேண்டும், மக்கள் மீது அக்கறை இருந்தால் இது தமிழக அரசு செய்யும் எனவும் கூறினார். சேலத்தில் நகரத்திற்குள் இரண்டு மேம்பாலங்கள் தோல்வியில் தான் முடியும். சரியான முறையில் திட்டமிடல் செய்யவில்லை 5 ஆண்டு காலத்தில் போக்குவரத்து நெரிசல் இந்த மேம்பாலம் தான் ஏற்படும். வளந்த நாடுகளில் மாநகரத்திற்கு வெளியே தான் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கும். எனவே சேலம் மாநகரத்திற்கு இணைப்பு சாலைகள் உருவாக்க வேண்டும் என்றும் கூறினார். ஆங்கில புத்தாண்டு நெருங்கும் நிலையில் ஆங்கில புத்தாண்டு நம்முடைய கலாச்சாரமே கிடையாது, உலகம் முழுவதும் மேற்கத்திய கலாச்சாரம் திணிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு இரண்டிலுமே மதுபோதையில் தான் இளைஞர்கள் உள்ளனர். 362 நாட்களில் டாஸ்மாக் கடைகள் திறந்து தான் உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஜனவரி ஒன்றாம் தேதி முதலே அனைவரையும் குடிகாரர்களாக மாற்றி விடுகிறார்கள். மது விற்பனை எந்த அளவிற்கு அதிகரித்துள்ளதோ, அந்த அளவிற்கு கஞ்சா விற்பனையும் உச்சத்திற்கு சென்றுள்ளது. எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது.கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முறையான வேகமில்லை என்றார். தற்போது உள்ள இளைஞர்கள் கஞ்சாவால் மிகவும் மோசமான நிலைக்கு சென்று கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை ஒழிக்க போதை ஒழிப்பு பிரிவில் 20 ஆயிரம் காவலர்களை நியமிக்க வேண்டும் என்றார்.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அதில் பலர் நிறைவேற்றப்படவில்லை அதில் ஒரு வாக்குறுதிகள் தான். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை ஒதுக்கீடு சட்டம் கொண்டு வருவோம் என்று சொன்னார். ஆனால் இன்னும் செய்யவில்லை கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு தமிழகத்தில் வேலையில்லை. தமிழகத்தில் கோடி கணக்கில் இளைஞர்கள் வேலை இன்றி உள்ளது. எனவே டிஎன்பிஎஸ்சியை மூடி விடலாம். ஆளுநருக்கும், அரசுக்கும் உள்ள பிரச்சினையில் மக்கள் ஏன் பாதிக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இந்த ஆண்டுதான் குறைந்த எண்ணிக்கையில் அரசு நியமனம் நடைபெற்றுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்டிற்கு 1.20 கோடி அரசு புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்று கூறியிருந்தார்கள் ஆனால் 5000 வேலை வாய்ப்பு கூட இல்லை தெரிவித்தார். உலக நாடுகளில் மழைக்காலங்களில் தண்ணீரில் சேகரித்து வைப்பதற்கும் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதை பின்பற்றி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். சென்னை சுற்றியுள்ள 100 கிலோமீட்டர் பரப்பளவில்10க்கும் மேற்பட்ட ஏரிகளை உருவாக்க வேண்டும். மழை காலங்களில் இந்த தண்ணீரை அங்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
திமுக ஆட்சி எப்போது வந்ததோ 300 ஏரி குளங்களை மூடிவிட்டது. அங்குதான் அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இன்னும் ஐந்து, ஆறு ஆண்டு காலங்களில் இதை விட பெரிய வெள்ளபாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்று இனி மழை வெள்ள பாதிப்புகள் வரும் என்று மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் பேசினார். இதை அமல்படுத்துவதற்கு அவர்களுக்கு தெரியவில்லை, அடுத்த தேர்தலில் எவ்வாறு வெற்றிபெறலாம் என்றுதான் பார்க்கிறார்கள். சென்னை அடுத்த 50 ஆண்டுகளில் எப்படி இருக்க வேண்டும் என்று எல்லாம் பார்க்கவில்லை. சென்னையில் வடிகால் அமைப்பதற்கு அதிமுக, திமுக ஆட்சியில் 5000 கோடி செலவு செய்ததாக கூறுவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளில் பத்தாயிரம் கோடி செலவு செய்தது குறித்து வெள்ள அறிக்கை தயார் செய்து வெளியிட வேண்டும். எங்கெங்கு கட்டப்பட்டுள்ளது என்று தெரிவிக்க வேண்டும் என்றும் பேசினார். இதுகுறித்து முறையான ஆய்வு நடத்த வேண்டும். இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் என்று கூறவேண்டும் எனவும் கேள்வி எழுப்பினர்.
மேலும் சென்னை வெள்ள பாதிப்புக்கு திமுக அரசு செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் திருப்தி இல்லை, ஒவ்வொரு அமைச்சர்களும் ஒவ்வொரு மாதிரி பேசுகிறார்கள். சில அமைச்சர்கள் ஆணவத்தில் பேசினார்கள் என்றும் தெரிவித்தார்.
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் குறித்த கேள்விக்கு, நாம் ஒரு செல்பி எடுத்துவிடலாமா என்று அன்புமணி பேசியதற்கு அனைவரிடமிருந்தும் சிரிப்பலை எழுந்தது. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஐந்து முதலமைச்சர்களை உருவாக்கிய பெருமையுள்ளது. பெருமைமிக்க ஒரு சின்னம் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ். அதில் மீது மிச்சம் உள்ளவை அந்த நுழைவாயில் மட்டும்தான். அதைப் பாதுகாக்க வேண்டும். இதில் எந்த ஒரு அரசியலும் செய்ய வேண்டாம். யாருக்கும் அச்சுறுத்தில் இருக்க கூடாது என்றும் கூறினார். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்
திடீரென நெடுஞ்சாலையில் வருவதாக கூறி வருகிறார்கள். இதற்கு முன்பாக இருக்கும்போது எவ்வாறு அதற்கு பட்டா கொடுத்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினர். இதை அரசியல் ஆக விரும்பவில்லை. இதை நினைவுச்சின்னமாக அடையாளத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்பட்டு வரும் நிலையில் இது குறித்து தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை விரைவில் அறிவிப்போம் என்றும் கூறினார். சபரிமலை சென்று திரும்பும் ஐயப்ப பக்தர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். கேரளாவில் தீவிரமடைந்து வரும் கொரோனாவால் பெரிதும் அச்சம் இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது என்றும் தெரிவித்தார்.