பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
இதுதான் திராவிட மாடலா?
கடந்த சில நாட்களுக்கு முன்பு தருமபுரியில் திமுக மாவட்டச் செயலாளர் அவங்க கட்சி கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் கலெக்டரும், எஸ்.பி.யும் என்னை கேட்காம ஏதும் செய்ய முடியாது. நான் சொல்றதுதான் சட்டம். கீழ் இருக்குற அதிகாரிகள் அதைத்தான் நடைமுறைப்படுத்தனும்.
ஒரு 10வது படிச்ச மாவட்டச் செயலாளர் ஐஏஎஸ்., ஐபிஎஸ் படித்த அதிகாரிகளுக்கு கட்டளையிடுகிறார் என்றால், தமிழ்நாட்டில் இதுதான் திராவிட மாடலா? வெட்கக்கேடு, கேவலம். இன்று வரை முதலமைச்சர் ஒரு நடவடிக்கைக்கூட எடுக்கவில்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது. தமிழ்நாட்டில் இந்த நிலைதான் இருக்கிறது. 10வது படித்த மாவட்டச் செயலாளர் மிரட்டுறாரு. இது முதலமைச்சர் சொல்லிதான் நான் பேசுறேனு சொல்றாரு.
ஒரு எஃப்.ஐ.ஆர். கூட போடல:
முதலமைச்சர் என்கிட்ட சொன்னாரு. யாராவது உங்கிட்ட அனுமதி பெறலனா சொல்லு நான் அவங்களை மாத்திட்றேனு ஒரு கூட்டத்துல திமுக மாவட்டச் செயலாளர் சொல்றாருனா.. அதுக்கு நடவடிக்கை எடுக்கலனா இதுதான் மோசமான சூழல் தமிழ்நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. யூ டியூபர் சவுக்கு சங்கர் ஐஏஎஸ்., ஐபிஎஸ் அதிகாரிகளை இதுபோன்று இப்படி பேசுனாரு.
அவர் மீது வழக்கு போட்டு கைது செஞ்சு சிறையில் வச்சீங்க. அதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம் இருக்குது? ஒரு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரியையும் அவதூறா பேசுனவங்க மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கல? ஒரு எஃப்ஐஆர் கூட போடல.
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேணடும் என்பது அனைத்துக்கட்சியின் நிலைப்பாடு. பீகார், கர்நாடகாவில் நடத்தி முடிச்சிட்டாங்க. ஆந்திராவில் நடத்திட்டு இருக்காங்க. ராஜஸ்தான், ஜார்க்கண்ட்ல நடத்தி முடிச்சிட்டாங்க.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு:
தமிழ்நாட்டு முதலமைச்சர் மட்டும் எங்களுக்கு அதிகாரம் இல்லனு சொல்றாரு. நாங்க கேக்குறது சென்சஸ் இல்ல. சர்வே தான் கேக்குறோம். சென்சஸ் என்பது மத்திய அரசுதான் எடுக்கனும். மக்கள்தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கனும். அதுதான் சென்சஸ், மக்கள்தொகை கணக்கெடுப்புல கூடுதலா ஒரு காலம்ன் சேத்துக்கோங்க. ஓபிசினு ஒரு காலம்ன். அவர்களுடைய நிலைப்பா, சமூக பொருளாதார நிலைப்பாடு தெரியாது.
மாநில அரசு எடுத்தால்தான் தெரியும். ஒரு உண்மையான சமூக நீதி அக்கறையுள்ள முதலமைச்சர் என்ன பண்ணிருப்பாரு? பொருளாதார முன்னேற்றம், தொழில் முன்னேற்றம், வேலைவாய்ப்பு முன்னேற்றம் இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லாத ஒரு முதலமைச்சர் ஸ்டாலின். எங்களுக்கு அதிகாரம் இல்லை என்கிறார்.
தமிழ்நாடு எங்கே இருக்கிறது?
தமிழ்நாடு ஜப்பான்ல இருக்குதா? சீனால இருக்குதா? மற்ற மாநிலங்களுக்கு அதிகாரம் இருக்குது. தமிழ்நாட்டிற்கு மட்டும் அதிகாரம் இல்லயா? யாரை ஏமாத்த பாக்குறீங்க. அதிகாரம் வைத்திருந்தும் இல்லை என்று சொல்பவர்கள் கோழைகள். அதிகாரம் இல்லாவிட்டாலும் அதிகாரம் இருக்கு என்று அதை நிறைவேற்றுபவர்கள் வீரர்கள். அதை நீங்களே முடிவு பண்ணிக்கோங்க ஸ்டாலின்.
இவ்வாறு அவர் பேசினார்.