வைகைபுயல் வடிவேலு திமுக ஆட்சி தொடரும் என்று சொன்னாலே தி.மு.க., தோல்வி அடைந்து விடும், என்பது தான் வரலாறு. அதேபோல் இன்றைக்கும் சொல்லி வருகிறார் நிச்சயம் தி.மு.க., தோல்வியை சந்திக்கும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரையில் பேசினார்.
ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம்
மதுரை கோ.புதூர் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா வின் 77 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் K ராஜு பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது;
காவல்பணியில் இருந்த போலீசார் சீருடையில் சீர்திருத்தம் செய்தவர் ஜெயலலிதா. பெண் சமுதாயம் பின்தூங்கி முன் எழும் பழக்கம் இருந்ததை இன்றைக்கு மருத்துவம், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் சாதித்து வருகிறார்கள் என்றால் அதற்கு காரணம் அம்மா ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்கள் தான். அம்மா மினி கிளினிக் மூடி, முதல்வர் மருந்தகம் திறக்கின்றனர். அம்மா உணவகத்தை மூடி விட்டார்கள். முதல்வர் ஸ்டாலினை இன்றைக்கு தன்னை அப்பா என்று அழைக்கிறார்கள் என்று அவரே சொல்லிக்கொள்கிறார்.யாரவது அவரை அப்பா என்று சொல்கிறீர்களா...? அப்படி சொன்னால் தவறாக போய்விடும். அம்மா என்பது பொதுச் சொல். தாய், தங்கைகளோடு பிறந்தவர்கள் கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுகின்றனர். காமுகன் ஆட்சியாக உள்ளது. இன்றைக்கு மூன்றில் ஒருபங்கு அமைச்சர்கள் மீது சொத்துகுவிப்பு வழக்கு உள்ளது. அனைத்து துறையிலும் ஊழல் மிகுந்து காணப்படுகிறது.
விடியல் தரபோராறு ஸ்டாலின் என்ற பாடல் இசைக்கப்படாமல் உள்ளது.
சனதானம் எதிர்ப்பு பேசும் திமுக ஆட்சியாளர்கள் வீட்டில் சாமிகும்பிடுவார்கள். வைகைபுயல் வடிவேல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் திமுக ஆட்சி தோல்வி பெரும் என்பது கடந்த கால வரலாறு, அதே போல் இன்றைக்கும் வடிவேலு திமுக ஆட்சி தொடரும் என்று சொல்லி வருகிறார். நிச்சயம் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி ஊத்திக்கொள்ள போகிறது நிச்சயம். இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளில் கூட விடியல் தரபோராறு ஸ்டாலின் என்ற பாடல் இசைக்கப்படாமல் உள்ளது என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Jobs: மதுரை, தேனி சுகாதாரத்துறையில் வேலை.. உடனே அப்ளே பண்ணுங்க
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மதுரையில் புல்லட் பேரணி நடத்திய விசிக.. 170 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸ்