தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள் தான் அதிக அளவில் பயனடைய போகிறார்கள். தற்போது 18%-ஆக இருக்கும் இட ஒதுக்கீடு 22%-ஆக உயரும். தமிழ்நாட்டில் ஒரு கோடியே 30 லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். ஆனால் திமுக அரசுக்கு அதைப் பற்றிய கவலை இல்லை என பாமக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்
தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 108 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று நாமக்கல் மாவட்டத்திற்கு சென்ற அவர் காலையில் மஞ்சள் விவசாயிகளை சந்தித்தார். பிறகு மாலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
தமிழ்நாட்டில் மற்ற சில துறைகளுக்கு இருப்பது போல மஞ்சள் வாரியம் என்ற ஒன்றை கொண்டு வர வேண்டும். காரணம் தமிழ்நாட்டில் மஞ்சள் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இது நமக்கெல்லாம் பெருமை. ஆனால் மஞ்சளை உற்பத்தி செய்யக்கூடிய விவசாயிகள் கடுமையாக வறுமையில் பாதித்து வருகின்றனர் அவர்களது விளைச்சலுக்கு ஏற்ற உரிய விலை கிடைப்பதில்லை எனவே தமிழக அரசு நெல்லுக்கு கொடுப்பது போல குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் அதாவது ஒரு குயின்டால் மஞ்சளுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்தை பெரியாரின் பெயரை உச்சரிப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது தந்தை பெரியார் சமூக நீதிக்காக பாடுபட்டவர் மது ஒழிப்புககு எதிராக பாடுபட்டவர். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் இதனை செய்கிறாரா என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டில் 11 மது ஆலைகள் இருக்கிறது அவற்றில் 7 மது ஆலைகள் திமுகவினருக்கு சொந்தமானது. கடந்த ஆண்டு இந்த மது ஆலைகளில் இருந்து 68,000 கோடிக்கு தமிழக அரசு மது வாங்கியிருக்கிறார்கள். அதிலும் 48,000 கோடி மதுவை திமுகவினருக்கு சொந்தமான ஆலைகளில் இருந்து வாங்கி இருக்கிறார்கள். இதுதான் திமுக அவர்களுக்கு கொள்ளை அடிப்பது மட்டும்தான் தெரியும்.
உலக அளவில் 90 விழுக்காடு மஞ்சள் இந்தியாவில் தான் விளைகிறது. இந்தியாவில் மஞ்சள் கொள்முதல் செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் விளையும் மஞ்சளில் 80 விழுக்காடு ஈரோட்டில் தான் விளைகிறது. ஆனால் மஞ்சளுக்கு உரிய விலை கிடையாது. ஒரு குவின்டால் மஞ்சளுக்கு 8000 பத்தாயிரம் என கிடைக்கிறது.
ஆங்கிலேயர் காலத்தில் 1931 இல் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே தான் தற்போது இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு அதன் மூலமாக மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது சாதிவாதி கணக்கெடுப்பு நடத்தினால் தான் எந்தெந்த சமுதாயம் முன்னேறி இருக்கிறது எந்தெந்த சமுதாயம் பின்தங்கி இருக்கிறது யாருக்கு படிப்பு கிடைத்திருக்கிறது யாருக்கு வேலை கிடைக்கவில்லை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் நமக்கு தெரிய வரும். இந்தியாவில் ஏழு மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியுள்ளன ஆனால் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மட்டும் எங்களுக்கு அதிகாரம் இல்லை மத்திய அரசு தன் செய்ய வேண்டும் என்று தட்டி கழித்து வருகிறார்.
முதலமைச்சர் இடம் அதிகாரமும் பணமும் இருந்தும் அதை செய்வதற்கு உரிய மனமில்லை. ஒருவேளை கலைஞர் இருந்திருந்தால் நிச்சயம் சாதிவாரி கணக்கெடுப்பை இந்நேரம் நடத்தி முடித்து இருப்பார். தமிழ்நாட்டில் கல்வித்தரம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருக்கிறது 25 சதவீத கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு கூட மாணவர்கள் கிடையாது. அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தரமாக இல்லை என்பதனால் மாணவர்கள் சேர தயங்குகிறார்கள்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 150 நாட்கள் வேலை கொடுப்போம் என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக அதனை நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 85 லட்சம் பேர் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் அதில் 45 லட்சம் பேருக்கு மட்டும் தான் வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் நடப்பு ஆண்டில் வெறும் 10 நாட்கள் மட்டும் தன் வேலையை கொடுத்திருக்கிறார்கள்.
நம்முடைய அண்டை மாநிலமான ஆந்திராவில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஒரு குயின்டால் நெல்லுக்கு 500 ரூபாய் அந்த மாநில அரசு வழங்குகிறது. ஆனால் தமிழக அரசு வெறும் 131 ரூபாய் மட்டும் தான் ஊக்கத்தொகையாக வழங்குகிறது.
1967-இல் தமிழ் மொழியை வைத்து தான் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் தாய் மொழிகள் படிக்காமல் பள்ளி முதல் கல்லூரி வரை படித்து பட்டம் பெற முடியும் அப்படி ஒரு சூழ்நிலையை திமுக உருவாக்கி வைத்துள்ளது. கொடுங்கோல் ஆட்சி , ஊழல் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம்முடைய உரிமையை மீட்டெடுப்போம் என்று கூறி அன்புமணி தன்னுடைய உரையை முடித்தார்.