Amma Mini Clinic Shut Down: ஜெயலலிதா பெயரால் காழ்ப்புணர்ச்சி.. மினி கிளினிக் மூடியதால் கொதித்தெழுந்த எடப்பாடி பழனிசாமி!
ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டதாலே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா மினி கிளினிக் என்ற திட்டத்தை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தை தற்போது ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 2 ஆயிரம் மினி கிளினிக்குகளையும் மூடப்பட்டுவிட்டது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். அவரது பேச்சுக்கு முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும், நகரப் பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் துவங்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு அம்மாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற ஒரே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இத்திட்டம் இந்த விடியா அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது. ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதை இந்த விடியா அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க : ரிட்டர்ன் ஆகும் செக்... கடத்தலில் ஆம்பர் கிரீஸ் என்னும் திமிங்கல கழிவு.. தென் மாவட்டங்களில் கவனிக்கவேண்டிய செய்திகள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
பிக்பாஸ் அஷராவுக்கு ரூ.1 கோடி ரூபாயில் அடித்த பம்பர் பரிசு.. சோஷியல் மீடியாவில் வைரல்..
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்