1.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடியை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மனைவி லட்சுமி வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்தார். இந்நிலையில் இவரது வீட்டின் முன்பு கட்டப்பட்ட ஆடுகளை வெறிநாய் கடித்து குதறியது. இதில் 10 வெள்ளாடுகள் இறந்து கிடந்தன. இறந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தருமாறு லட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

2. ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் நாளில் 6,100 மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.




3. சிவகங்கை அருகே உள்ள இராகினிபட்டி கிராமத்தில் சுமார் 25ஆண்டுகளுக்கு மேல் சாலை வசதி இல்லாததால் திருமணம் தடை பெறுவதாக இளைஞர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சாலையை சரி செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

4. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசுகுடோன் வெடி விபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பங்களுக்கு வழங்கிய 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகைக்கான செக் ரிட்டன் ஆனதால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போலீசில் நேற்று புகார் தெரிவித்தனர்.

 



5. விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் விழுப்பனூரில் நுண்கற்காலம், புதிய கற்காலத்தை சேர்ந்த கற்கருவிகள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன. 12 ஆயிரம் ஆண்டுகள் தொடர் வரலாற்று சிறப்பு கொண்ட இந்த பகுதியை அகழாய்வு செய்ய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

6. திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலுக்கு ஜூலை மாதத்திற்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

 

7. திண்டுக்கல்லில் மீன் பிடிப்பதற்காக குளத்தை குத்தகைக்கு எடுத்ததில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, வாலிபர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை 12 மணிநேரத்தில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.


8. தூத்துக்குடி மாவட்டம் வைப்பார் கிராமத்தில்  வீரபாண்டிய கட்டபொம்மன் 263 வது பிறந்தநாளை முன்னிட்டு, நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

 

9. வீரபாண்டிய கட்டபொம்மனின் 263 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் உள்ள கட்டபொம்மனின் திருவுருவ சிலைக்கு கட்டபொம்மனின் நேரடி வாரிசான வீமராஜா என்ற ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



10. "எங்களுக்கு கருப்பும் தேவை, சிவப்பும் தேவை. எதையும் நாங்கள் ஒதுக்கவில்லை. எல்லா நிறமும் எங்களுக்கு தேவை" - மதுரையில் பி.ஜே.பி மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு.

 

11. தென்காசியில் ரூ.3.5 கோடி மதிப்புள்ள ஆம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கலகழிவு கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.



12. நெல்லை - தூத்துக்குடியில் உரக்கடைகளில் யூரியா வாங்கி செல்வதற்கு விவசாயிகள் கூட்டம் நேற்று அலைமோ தியது. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து விவசாயிகள் யூரி யாவை வாங்கிச் சென்றனர்.

 

13. தேனி மாவட்டம் வருசநாடு அடுத்த தும்மகத்து, குண்டு ஊராட்சியில் சிதிலமடைந்த ரேஷன் கடை  மேற்கூரையை சீரமைக்க வேண்டும் என பொதுகள் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

14. சிவகங்கை மாவட்டத்தில் 2021ம் ஆண்டு கூட்டுக் கொள்ளை, கொள்ளை, வழிப்பறி,திருட்டுபோன்ற வழக்குகளில் பதிவான 336 வழக்குகளில் 175 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய் யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.1 கோடியே 6 லட்சத்து 44ஆயிரத்து 276 மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை தடுப்பு குற்றத்தில் 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3 லட்சத்து 33ஆயிரத்து 400 மதிப்புள்ள 33 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

15. சிவகங்கையில் வீரமங்கை வேலு நாச்சியாரின் 292வது பிறந்த தினத்தையொட்டி சிவகங்கை காளையார் கோயில் சாலையிலுள்ள நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.