Jagdeep Dhankhar Jaya Bachchan: ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தங்கருக்கும் ஜெயா பச்சனுக்கும் இடையேயான வார்த்தை போர் எதனால் ஏற்பட்டது, எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்யும் அளவுக்கு என்னதான் நடந்தது என இங்கு தெரிவிக்கப்படுகிறது.
சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்ந்த அமிதாப் பச்சன் மனைவி ராஜ்யசபாவில் எம்.பி-யாக உள்ளார். அவையில் விவாதத்தின் போது, ராஜ்யசபா தலைவரும் , துணை குடியரசுத் தலைவருமான ஜெகதீப் தங்கர் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டது. அவருக்கு இடையிலான விவாவதத்தையடுத்து, ஜெயா பச்சனுக்கு ஆதராவாக எதிர்க்கட்சிகளும் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். இதனால், அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, எதிர்க்கட்சிகள் அவை தலைவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வெளிநடப்பு செய்தனர்.
நடந்தது என்ன?
ஜெயா பச்சனை பேச அழைக்கும் போது, அவரது கணவரது பெயரையும் சேர்த்து ஜெயா அமிதாப் பச்சன் என அவைத் தலைவரான ஜெகதீப் தங்கர் அழைத்தார். இதனால், கோபமடைந்த ஜெயா பச்சன்,” நான் ஒரு கலைஞர், எனக்கு உடல் மொழி புரியும்,மன்னிக்கவும், உங்கள் பேசிய தொனி ஏற்கத்தக்கதாக இல்லை என தெரிவித்தார்.
இது முதல் முறை இல்லை, இதற்கு முன்பும் , இவ்வாறு அழைக்கப்பட்ட போது, தனது கணவரது பெயரோடு சேர்த்து அழைக்க வேண்டாம் என ஜெயா பச்சன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால், உணர்ச்சிவசப்பட்ட அவைத் தலைவர், ஜெயா ஜி நீங்கள் நற்பெயரை சம்பாதித்து உள்ளீர்கள், நீங்கள் பிரபலமாக இருக்கலாம்; ஆனால், நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இதனால், மீண்டும் கோபமடைந்த ஜெயா பச்சன் , எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் , எதிர்க்கட்சியினர் பலரும் , அவைத் தலைவர் பேசியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்க, அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவையிலிருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்து எதிர்ப்பை பதிவை செய்தனர்.
”எதிர்ப்பு தெரிவித்தேன்”
அப்போது பேசிய ஜெயா பச்சன், அவைத் தலைவர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு என்ன பேசினாலும் அனுமதிக்கப்படும் என்ற நிலை இருக்கிறது. நீங்கள் பிரபலமாக இருக்கலாம், எனக்கு கவலையில்லை என்ற வார்த்தையை எதற்காக பயன்படுத்த வேண்டும் , இதனால்தான் எதிர்ப்பு தெரிவித்தேன்.
" அவைத் தலைவர் பயன்படுத்திய தொனியை நான் எதிர்த்தேன். நாங்கள் பள்ளி குழந்தைகள் இல்லை. எங்களில் சிலர் மூத்த குடிமக்கள். நீங்கள் ஒரு பிரபலமாக இருக்கலாம், எனக்கு கவலையில்லை என கூறுகிறார். எனக்கு, அவரது அக்கறை தேவையில்லை. ஐந்தாவது முறை உறுப்பினாரக இருக்கிறேன். நான் என்ன சொல்கிறேன் என்பது எனக்குத் தெரியும்,
தற்போது, பாராளுமன்றத்தில் பேசப்படும் விதத்தில், இதுவரை யாரும் பேசியதில்லை. எனக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜெயா பச்சன் தெரிவித்தார்.
ஏற்கனவே, இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கு இடையே சர்ச்சை ஏற்பட்ட நிலையில், மீண்டும் இன்று நிகழ்ந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது