முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க செல்லவுள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய அவர் முடிவெடுத்திருக்கிறார். அதற்கான அறிவிப்பு இன்று மாலை ஆளுநர் மாளிகை வாயிலாக வெளியிடப்படும் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.


இன்று மாலை அமைச்சரவை மாற்றம் ?


அமைச்சரவையில் பல்வேறு அமைச்சர்களின் இலாக்காக்களை மாற்றியமைக்க முதல்வர் முடிவு செய்த நிலையில், கடந்த சில நாட்களாக அதற்கான ஆலோசனைகள் தொடர்ச்சியாக நடந்துவந்தது. இந்நிலையில், அதில் ஆலோசனையில் முடிவு எட்டப்பட்டு இன்று மாலை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவிருக்கிறது.


குறிப்பாக, அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருக்கும் ஒருவருக்கு வேறு இலாக்கா தரப்படாலாம் என்றும் அல்லது அவர் அமைச்சரவையை விட்டே நீக்கப்படலாம் என்றும் செய்திகள் உலா வந்த வண்ணம் இருக்கிறது. 


யார் யாருக்கு வாய்ப்பு?


இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது குறிப்பாக திமுக சட்டமன்ற கொறடா கோவி செழியன், எம்.எல்.ஏ பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டோருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.