அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 1.37 கோடி வசூலித்து மோசடி செய்ததாக மாஜி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணி மீது சேலம் எஸ்.பியிடம் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் புகார் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் மணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 



புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது, சேலம் நடுப்பட்டியை சேர்ந்த மணி என்பவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட உதவியாளராக இருந்தவராகவும், எடப்பாடி ஆட்சியில் இருக்கும்போதே உங்களுக்கு வேண்டப்பட்ட நபர்கள் இருந்தால் சொல்லுங்கள், அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்றும் கூறினார். இதையடுத்து நானும் மேச்சேரி பள்ளிப்பட்டியை சேர்ந்த சிவகுமாரும், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை நாங்கள் 25 பேரிடம் பணம் வாங்கினோம். வனத்துறை, மின்சாரத்துறை, பள்ளியில் உள்ள ஆய்வகம், ரேஷன் கடை, கால்நடைத்துறை மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி வேலை என மொத்தம் 25 பேரிடம் ஒரு கோடியே 37 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொடுத்தோம்.


இதில் மின்சார துறை உதவிப் செயற்பொறியாளர் பதவிக்காக ரூபாய் 15 லட்சம்‌. உதவி மக்கள் தொடர்பு அதிகாரி வேலைக்கு ரூபாய் 30 லட்சம் என பணம் வாங்கினோம். பணத்தை வாங்கிய மணி, அவர் சொன்னபடி அரசு வேலை வாங்கித் தரவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் வேலை வாங்கிக் கொடுங்கள், இல்லையென்றால் பணத்தை திரும்பக் கொடுங்கள் என கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதனால் கொடுத்த பணத்தை திரும்பத் தருமாறு அவரிடம் கேட்டோம். அவரும் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தார். இதுவரை ரூபாய் 60 லட்சம் கொடுத்தால், மீதமுள்ள 77 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுக்கவில்லை. மழையிடம் பணம் கேட்டும் பல்வேறு காரணங்களைச் சொல்லி ஏமாற்றி வந்த நிலையில், தற்போது பணம் கொடுக்க மறுத்ததுடன் தரக்குறைவாக வார்த்தையால் பேசி இனி வீட்டிற்கு வந்தால் அடையாளம் தெரியாமல் செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை மீட்டுத்தர வேண்டும் எனவும்,  சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எஸ்.பியிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் மணியை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மணி ஆரம்ப காலம் முதல் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



இதேபோன்று, ஈரோடு மாவட்டம் கோபி அருகே நம்பியூர் அதிமுக ஒன்றிய செயலாளராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் தம்பி என்கிற சுப்ரமணியம் கொலை மிரட்டல் வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கோபி அருகே வெள்ளகோவில் ஆலயத்தில் கடந்த 14ஆம் தேதி தடுப்பூசி முகாம் நடைபெற்றது.  அப்போது சுப்பிரமணி தடுப்பூசி செலுத்த வந்தவர்களுக்கு, பிஸ்கட் தண்ணீர் பாட்டில் வழங்கியுள்ளார். சுப்பிரமணி முக கவசம் அணியாமல் தண்ணீர் பாட்டில் வழங்கியுள்ளார் இதனை அங்கிருந்த இளங்கோ என்பவர் கண்டித்த போது, சுப்பிரமணி அவரை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். இதுகுறித்து இளங்கோ அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், சுப்பிரமணியை நேற்று காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். பின்பு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். சிறையில் அடைக்கப்பட்ட சுப்பிரமணியை முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறையில் சந்தித்தார். தொடர்ந்து அதிமுகவினர் கைது செய்யப்படுவதால் கட்சி வட்டாரத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டுள்ளது.