விழுப்புரம்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது முன்வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காத நிலையில் தைலாபுரத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்று வருகிறது.
பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம்
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் தைலாபுரம் தோட்டதில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பாமக ராமதாஸ் தலைமையில் கடந்த 17 ஆம் தேதி அன்று பட்டானூர் பகுதியில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக செயல் தலைவர் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டன. ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் 19 ஆம் தேதி தைலாபுரத்தில் நடைபெற்றதில் குற்றச்சாட்டுகள் குறித்து அன்புமணிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது அதற்கான கெடு 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்கள் பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், மக, ஸ்டாலின், துரை, சதாசிவம், நெடுஞ்கீரன், பானுமதி சத்தியமூர்த்தி, திருமலை குமாரசாமி, பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினரும் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினரான அருள், மருத்துவர் அன்புமணி ராமதாசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பட்டுள்ளது அன்புமணி ராமதாஸ் பதில் அளித்திருக்கிறாரா இல்லை என்பது தெரியவில்லை, இது குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்கள் 9 பேருடன் இன்று தைலாபுரத்தில் கூட்டம் நடைபெறுவதாகவும் இதில் 9 நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு கட்சியின் நிறுவன தலைவர் ராமதாசிடம் ஒப்படைத்த பின்னர் அவர் முடிவு செய்வார் என தெரிவித்தார். பாமக கட்சி தொண்டர்கள் எதிர்ப்பார்ப்பு அன்புமணி ராமதாஸ் மருத்துவர் ராமதாசை சந்தித்து அய்யா சொல்வதை கேட்டு செயல்தலைவராக செயல்படுவேன் என கூற வேண்டும் அந்த நாளுக்காக காத்திருப்பதாகவும் வெகு விரைவில் அது நடைபெறும் என கூறினார்.
மேலும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கூட்டணியில் பாமக வருமென்ற கேள்விக்கு மருத்துவர் ராமதாஸ் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட்டு அவர் எந்த கூட்டணியில் அங்க வைக்க முடிவு செய்கிறாரோ அந்த கூட்டணி தான் வெற்றி பெறும் அவர்கள்தான் அடுத்தது தமிழகத்த்தில் ஆட்சி அமைப்பார்கள் மக்கள் எதிர்பார்க்கும் கூட்டணியை மருத்துவர் ராமதாஸ் வைப்பார் என தெரிவித்தார்.