முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்குப் பின் சசிகலா தலைமையில் ஒரு அணியும், அன்றைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் பிரிந்து, அதிமுக பிளவுப்பட்டது. அக்கட்சியின் இரட்டை இலைச்சின்னமும் முடக்கப்பட்டது. இந்நிலையில் தான், சசிகலா சிறைக்குச் சென்ற பின், ஓபிஎஸ்-இபிஎஸ் இணைப்பு நடைபெற்ற, அதிமுக ஒன்றிணைந்தது. டிடிவி தினகரன் தலைமையில் மற்றொரு அணி உருவானாலும், பெரும்பான்மையோடு அதிமுக ஆட்சியை தொடர்ந்தது. அன்றைய தமிழகத்தின் முதல்வராக இருந்த வித்யாசகர் ராவ், ஓபிஎஸ்-இபிஎஸ் கைகளை இணைத்து வைத்து, அதிமுக ஆட்சியை தொடர அனுமதித்தார். 


அதிமுக இணைப்புக்குப் பின் 2017 ஆகஸ்ட் 21 அன்று, அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இரு அணிகளும் சேர்ந்து நிர்வாகிகளை சந்தித்தனர். அதற்கு முன்பு வரை இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கடுமையாக சாடி கருத்து யுத்தம் நடத்திக் கொண்டிருந்த ஓபிஎஸ், தனது பேச்சில் முற்றிலும் மாறுபட்டி வகையில் பேசினார். 




இதோ அந்த பேச்சு... 


‛‛நாமெல்லாம் ஒரு தாய் மக்கள். எங்களை யாரும் பிரிக்க முடியாது. நாங்கள் புரட்சித் தலைமை அம்மாவின் பிள்ளைகள். என்ற உணர்வோடு நாமெல்லாம் கூடி, இணைந்து தமிழக மக்கள் மட்டுமல்லாமல், இயக்கத்தில் இருக்கும் ஒன்றரை கோடி தொண்டர்கள் , இந்த இயக்கத்தின் ஆனி வேராக , இந்த இயக்கத்தை தாங்கிக் கொண்டிருக்கும் தொண்டர்கள் விருப்பத்திற்கு இணங்க, அவர்களின் ஏக்க கனவுகளை நிறைவேற்றும் வகையில் இன்றைக்கு நாம் இணைந்திருக்கிறோம். 


இந்த இணைப்புக்கு முழு ஒத்துழைப்பு தந்த, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், அவரோடு உறுதுணையாக இருக்கின்ற தலைமை கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள், கழக பொறுப்பாளர்கள், கழக மூத்த முன்னோடிகள், அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறோம் . இனிமேலும் வருகின்ற காலங்களில் நாம் அனைவரும் இணைந்து புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின், தொடர்ந்து இரண்டாவது முறையாக 32 ஆண்டுகளுக்கு பின்னாலே ஆண்ட கட்சி மீண்டும் ஆளும் பொறுப்பினை நமக்காக பெற்றுத் தந்திருக்கிறார்கள். 


அந்த ஆட்சி புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திட்டங்களை கனவுகளை கொள்கைகளை நிறைவேற்றும் வகையில், எதிர்காலத்தில் ஜனநாயகத்தில் எந்த தேர்தல் வந்தாலும், அந்த தேர்தலில் நாம், நம்மை எதிர்க்கின்ற கட்சிகளை எல்லாம், எதிர்கொண்டு நின்று வெற்றியடைவதற்கு இந்த இணைப்பு வரலாற்று சிறப்பு மிக்கத்துவமாக, பாலமாக இருக்கும் என்பதை இந்த நல்ல நேரத்தில் தெரிவித்துக் கொண்டு, அனைவரும் ஒத்துழைப்பு தந்ததற்கு மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


உங்களையெல்லாம் பார்ப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். உள்ளபடியே என் மனதில் இருந்த பாரம் குறைந்தது,’’


என்று அந்த பேச்சில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். ஆனால், இன்று அந்த பேச்சுக்கு நேர்எதிரான நிலைக்கு அவர்களின் இணைப்பு மாறியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண